என்னங்க இதெல்லாம்...? 'ஊரடங்கு' அதுவுமா 'வெளிய' சுத்திட்டு இருக்கீங்க...? டக்குன்னு 'சாக்லெட் கவரை' எடுத்து போலீசாரிடம் 'சொன்ன' காரணம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா வைரஸ் காரணமாக ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக பல இடங்களில் போலீசார் வாகன சோதனைகள் நடத்தி வருகின்றனர்.
ஊரடங்கை மீறி ஒரு சில காரணங்களுக்காக வெளியே வரும் மக்களிடம் உரிய ஆவணங்கள் சோதித்து அதன் பிறகே அனுமதிக்கப்பட்டனர். கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக உள்ளதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.
இந்த நிலையில் குன்றத்தூர் பகுதியில் போலீசார் தடுப்புகள் அமைத்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட போது, அந்த வழியாக வந்த நபர் ஒருவரை போலீசார் வழிமறித்து ஊரடங்கு அதுவுமா எதற்காக வெளியில் நடமாடுகுறீர்கள்..? அரசின் அறிவுரையை கேளுங்கள் என கண்டித்து உள்ளனர். அப்போது தான் மருத்துவமனையில் இருந்து வருவதாகவும், தனக்கு குழந்தை பிறந்து உள்ளததாகவும் போலீசாரிடம் கூறியுள்ளார்.
அதோடு குழந்தையை பார்த்துவிட்டு வருவதால், அந்த சந்தோசத்தை தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் என்றுக்கூறி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு சாக்லேட் வழங்கி விட்டு சென்றுள்ளார்.