'பீனிக்ஸ் பறவையா திரும்பி வருவீங்க'...'கதறி அழுத சிவன்'...'கட்டி அணைத்த மோடி'...உணர்ச்சி பொங்கும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Sep 07, 2019 10:25 AM

கதறி அழுத்த இஸ்ரோ தலைவர் சிவனை மோடி கட்டி அணைத்து தேற்றிய வீடியோ பலரையும் உணர்ச்சிவசப்பட செய்துள்ளது

Sivan breaks down after Vikram contact lost Modi consoles with Hug

’சந்திரயான் 2’ திட்டத்தின் நிறைவுப்பணியான, விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்கும் பணிக்கான ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டிருந்தன. இதனை காண ஒட்டு மொத்த இந்திய மக்களும் ஆர்வமுடன் காத்திருந்தர்கள். நேரலையில் இந்த நிகழ்வை பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வந்திருந்தார். மேலும் பூடானைச் சேர்ந்த மாணவர்களும் நிகழ்வினை காண ஆர்வம்முடன் காத்திருந்தார்கள்.

இதனிடையே ஒட்டுமொத்த தேசமும் எதிர்பார்க்க விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கத் தொடங்கியது. திட்டமிட்டபடி நிலவை நோக்கிச் சென்ற விக்ரம் லேண்டர், நிலவில் தரையிறங்க 2.1 கிலோ மீட்டர் தொலைவே இருந்தபோது, சிக்னல் துண்டிக்கப்பட்டது. இதனால், சிக்னல் மீண்டும் வரும் என்ற எதிர்பார்ப்பில் இஸ்ரோ மையமே இறுக்கமான அமைதிக்கு சென்றது.

பின்னர், பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், விக்ரம் லேண்டரிலிருந்து எதிர்பார்த்தபடி சிக்னல் கிடைக்க வில்லை என்று அறிவித்தார். எனினும், எதிர்வரும் விண்வெளித் திட்டங்களில் விஞ்ஞானிகள் சாதிப்பார்கள் என பிரதமர் மோடி நம்பிக்கையூட்டினார். இதையடுத்து விஞ்ஞானிகளிடையே பேசிய பிரதமர் மோடி ''‘நானும், நாடும் உங்களுடனே இருக்கிறோம். குறிக்கோளை எவ்வளவு நெருங்க முடியுமோ, அவ்வளவு நெருங்கியுள்ளீர்கள்.

நாட்டின் வளர்ச்சிக்காக நம்ப முடியாத அளவுக்கு பணியாற்றியுள்ளீர்கள். நாட்டுக்காக வாழ்கிறார்கள் இஸ்ரோ விஞ்ஞானிகள். இவர்களை நினைத்து நாடே பெருமை கொள்கிறது. நமது தாய்நாட்டிற்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் தூக்கமின்றி இரவு பகலாக உழைத்து வருகின்றனர்’ என கூறி அனைத்து விஞ்ஞானிகளுக்கும் ஆறுதல் கூறினார்.

இதையடுத்து மோடி தனது உரையை முடித்து விட்டு அங்கிருந்து கிளப்பினார். அப்போது இஸ்ரோ தலைவர் சிவன், மோடியிடம் கண்ணீர் விட்டு அழுதார். அப்போது அவரை கட்டித் தழுவிய பிரதமர் மோடி, அவரை தேற்றி ஆறுதல் கூறினார். இதைக் கண்ட அங்கிருந்த மற்ற விஞ்ஞானிகளும் கண்கலங்கினர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

Tags : #NARENDRAMODI #SIVAN #ISRO #VIKRAM CONTACT