'டிராவிட்டை இந்திய அணியின் கோச்சாக நியமிக்க கூடாது!'.. முன்னாள் வீரர் வாசீம் ஜாஃபர் கடும் எதிர்ப்பு!.. 'ஓ... இது தான் காரணமா'!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுராகுல் டிராவிட் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட கூடாது என முன்னாள் வீரர் வாசீம் ஜாஃபர் பகீர் கருத்தை தெரிவித்துள்ளார்.

இளம் வீரர்களை கொண்ட இந்திய ஏ அணி தற்போது இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. வரும் ஜுலை 13ம் தேதி முதல் ஜூலை 26ம் தேதி வரை 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது.
இந்தியாவின் முதல் தர அணி இங்கிலாந்து சென்றிருப்பதால், இலங்கை தொடருக்கு ஷிகர் தவான் தலைமையில் புதிய அணி உருவாக்கப்பட்டது. அதே போல பயிற்சியாளராக முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் பணியாற்றி வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணிக்கு பயிற்சி அளித்து சிறந்த வீரர்களை உருவாக்கி வரும் டிராவிட், இந்தியாவின் மெயின் அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தோல்வியை தழுவியதால், பயிற்சியாளர் ரவிசாஸ்திரி மீது ரசிகர்கள் குறை கூறி வருகின்றனர். எனவே, அவருக்கு பதிலாக அடுத்த தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டையே நியமிக்க வேண்டும் என முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் கோரி வருகின்றனர்.
இந்நிலையில், வாசீம் ஜாஃபர் மட்டும் அதற்கு மாறாக கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ராகுல் டிராவிட் தற்போது இலங்கை தொடருக்கான பயிற்சியாளராக சென்றுள்ளார். அணியின் இளம் வீரர்கள் நிச்சயம் பயனடைவார்கள். ஆனால் அவரை இந்திய அணியின் நிரந்தர பயிற்சியாளராக நியமிக்க கோருவது சரியாக இருக்காது. தொடர்ந்து அவரை 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியிலே தான் வைத்திருக்க வேண்டும்.
இந்தியாவின் சர்வதேச அணியில் இருக்கும் வீரர்கள் அனைவரும் ஒரு முழுமையான வீரர்களாக மாறியவர்கள். ஏற்கனவே நன்கு பயிற்சி பெற்ற உலகத்தரம் வாய்ந்த வீரர்களாக உள்ளனர். ஆனால், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணிக்கு தான் ராகுல் டிராவிட் தேவை. அவர்களுக்கு நன்கு பயிற்சி அளித்து சிறந்த வீரர்களாக உருவாக்க கூடிய பொறுப்பு ராகுல் டிராவிட்டுக்கு உள்ளது" எனக் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்
