'செம்ம கில்லாடிங்க அவரு!.. எங்க வித்தைய வச்சு... எங்களுக்கே தண்ணி காட்டுறாரு'!.. டிராவிட் 'மாஸ்டர் ப்ளான்'!.. அலறும் சீனியர்ஸ்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manishankar | May 14, 2021 12:31 PM

தனது அசாத்திய தொலை நோக்கு கிரிக்கெட் திறமையால், ராகுல் டிராவிட் செய்த சம்பவத்தை பார்த்து கிரேக் சாப்பல் மெய் சிலிர்த்துவிட்டார்.

rahul dravid cues from australia pool greg chappell

கங்குலி தலைமையிலான இந்திய அணிக்கும், டிராவிட் தலைமையிலான இந்திய அணிக்கும் பயிற்சியாளராக இருந்தவர், கிரேக் சாப்பல். இவருடைய பயிற்சியின் கீழ் தான், இந்திய அணி தொடர்ச்சியாக 17 போட்டிகளில் சேஸிங்கில் வென்று சாதனைப் படைத்தது. அப்போது கேப்டனாக இருந்தவர் தான் டிராவிட்.  

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, இந்திய அண்டர் 19 அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார் டிராவிட். அப்போது, இந்திய அணியின் சிறந்த எதிர்காலத்துக்காக வலுவான அணியை உருவாக்கும் பணிகளை மேற்கொண்டார். தற்போதைய இந்திய அணியின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்களாக வலம் வரும் பல வீரர்களை தேடிக் கண்டுபிடித்து செதுக்கியவர் ராகுல் டிராவிட். 

இந்திய அணியின் எதிர்கால விக்கெட் கீப்பர், தோனிக்கு மாற்று எனும் நம்பிக்கையை ஓரளக்காவது விதைத்திருக்கும் ரிஷப் பண்ட் முதல் ப்ரித்வி ஷா, ஷுப்மன் கில், ரியான் பராக், ஷ்ரேயாஸ் ஐயர், நவ்தீப் சைனி, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், மயங்க் அகர்வால், கம்லேஷ் நாகர்கோட்டி வரை இவர் கண்டறிந்த திறமையாளர்கள் தான். 

அதுமட்டுமின்றி, இவரது பயிற்சியின் கீழ், 2016ல் நடைபெற்ற அண்டர்-19 உலகக் கோப்பை இறுதிப் போட்டி வரை முன்னேறிய இந்திய அணி, 2018ல் கோப்பையைக் கைப்பற்றியது. ஆகையால், டிராவிட் போன்ற ஒரு மெகா பவர் இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக வேண்டும் என்பது ரசிகர்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.

இந்த நிலையில், இந்தியாவில் தனது பயிற்சித் திறமையினால் ராகுல் டிராவிட் வலுவான இளம் வீரர்கள் உடைய நல்ல கட்டமைப்பை உருவாக்கியுள்ளார் என்று இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் கிரெக் சாப்பல் புகழாரம் சூட்டியுள்ளார். 

இதுகுறித்து அவர், இளம் வீரர்களைத் திறமையான அளவில் உருவாக்கி இந்தியா, இங்கிலாந்து அணிகள் ஆஸ்திரேலியாவைப் பின்னுக்குத் தள்ளிவிட்டன. நல்ல அடித்தளம் இந்த இரு நாடுகளில் உருவாகியுள்ளன. அதிலும் குறிப்பாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட், ஆஸ்திரேலியர்களின் மூளையைப் பயன்படுத்தி இந்தியாவில் இளம் வீரர்களுக்கான வலுவான கட்டமைப்பை உருவாக்கிவிட்டார். 

ஆஸ்திரேலியாவில் நாங்கள் எப்படி இளம் வீரர்களை உருவாக்கினோமோ, அதேபோன்று அதே வழிமுறைகளைக் கொண்டு, இந்தியாவில் இளம் வீரர்களை ராகுல் டிராவிட் உருவாக்கி வருகிறார். வரலாற்று ரீதியாகவே இளம் வீரர்களை அதிகமாக உருவாக்கும் நாடு என்று பெயரெடுத்தோம். ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக அந்தப் பெயர் மாறிவிட்டது. இளம் வீரர்கள் அதிகமான அளவில் வந்தாலும் அவர்களில் பலர் எதிர்பார்த்த அளவுக்குச் சிறப்பாக விளையாட முடியவில்லை. 

ஆஸ்திரேலியாவை விட, இந்திய அணி இன்னும் சிறப்பாக இளம் வீரர்களை உருவாக்குகிறது. பும்ரா, கோலி, ஜடேஜா, ஷமி என முக்கிய சீனியர் வீரர்கள் இல்லாமல், பார்டர் கவாஸ்கர் கோப்பையில் விளையாடிய இந்திய அணியை 'ஏ அணி' என்று பலரும் கூறினாலும், அதில் விளையாடிய இளம் வீரர்கள் செயல்பாடு அனுபவ வீரர்களைப் போல் இருந்தது என்று புகழ்ந்து பேசியுள்ளார் கிரெக் சாப்பல்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Rahul dravid cues from australia pool greg chappell | Sports News.