ஒன்னுக்கு ஒன்னு சளைச்சதில்ல... பவுலர்ஸ திணறடிக்கும்... இவங்க ரெண்டு பேரையும் ஆர்சிபியில் கோச் பண்றது யாரு?.. லீக்கான டாப் சீக்ரெட்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் டீ வில்லியர்ஸ் குறித்து கோச் சைமன் காட்டிச் தெரிவித்துள்ள கருத்து ரசிகர்களிடையே பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்தியுள்ளது.

2021 ஐபிஎல் சீசனில் சிறப்பான துவக்கத்தை ஆர்சிபி அணி கொடுத்து வருகிறது. இதுவரை விளையாடியுள்ள 5 போட்டிகளில் சிஎஸ்கேவிற்கு எதிரான கடந்த போட்டியில் மட்டுமே தோல்வியைத் தழுவியுள்ளது.
ஆர்சிபி அணியில் உலகின் மிகச்சிறந்த இரண்டு வீரர்கள் விராட் கோலி மற்றும் ஏபி டீ வில்லியர்ஸ் உள்ளது அந்த அணியின் சிறப்புக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. அவர்கள் இருவரும் கடந்த வருடங்களில் தங்களது அணியின் நம்பிக்கைக்கு அடிப்படையாக அமைந்துள்ளனர்.
இதனிடையே, அவர்கள் இருவரும் சிறப்பான உலக தரத்திலான வீரர்கள் என்பதால் அவர்களுக்கு ஏற்ப தன்னுடைய கோச்சிங்கை மாற்றிக் கொண்டுள்ளதாகவும், ஆனால் அவர்கள் இருவருக்கும் கோச்சிங்கே தேவையில்லை என்றும், தங்களுக்கு தாங்களே அவர்கள் சிறந்த கோச்களாக இருப்பதாகவும் அணியின் தலைமை கோச் சைமன் காட்டிச் தெரிவித்துள்ளார்.
உலக தரத்திலான வீரராக இருந்தாலும் விராட் கோலி இன்னமும் கற்றுக் கொள்வதில் அதிகமாக ஆர்வம் காட்டி வருவதாகவும் காட்டிச் தெரிவித்துள்ளார். அவருடைய போட்டியை சிறப்பாக்கும் எந்த புதிய விஷயம் குறித்தும் அவர் கேட்டு அறிந்துக் கொள்வார் என்றும் அவர் மேலும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
