பதவி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம்.. யாருமே எதிர்பார்க்காத வகையில் டிவிட்டரில் தனது BIO-வை மாற்றிய ராகுல் காந்தி.. TRENDING
முகப்பு > செய்திகள் > இந்தியாராகுல் காந்தி தமது டிவிட்டர் பக்கத்தில் உள்ள பயோவை மாற்றியுள்ளார்.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் RC15.. செம டைட்டிலுடன் வெளியான MOTION POSTER வீடியோ!
கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது, கர்நாடகா மாநிலத்தில் உள்ள கோலார் தங்க வயலில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசும் போது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, "நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என்று எல்லா திருடர்களின் பெயர்களும் மோடி என முடிவது ஏன்?. அனைத்து திருடர்களும் மோடி என்ற பெயரையே கொண்டுள்ளனர்." என்று பேசியிருந்தார்.
Images are subject to © copyright to their respective owners.
இந்த சர்ச்சைக்குரிய பேச்சுக்கு எதிராக குஜராத்தை சேர்ந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் புர்னேஷ் மோடி என்பவர் ராகுல் காந்தி மீது குஜராத் மாநிலத்தின் சூரத் நீதிமன்றத்தில் 2019ஆம் ஆண்டு அவதூறு வழக்குத் தொடர்ந்தார்.
Images are subject to © copyright to their respective owners.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.15,000 அபராதமும் விதித்தது. மேலும் ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் மக்களவை செயலகத்தால் பறிக்கப்பட்டது. இதனால் ராகுல் காந்தி வெற்றிபெற்ற வயநாடு பாராளுமன்ற தொகுதி காலியாக இருப்பதாக விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Images are subject to © copyright to their respective owners.
இந்நிலையில் ராகுல் காந்தி தமது டிவிட்டர் பக்கத்தில் தனது பயோவை மாற்றியுள்ளார். அதில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.பி. என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
Also Read | அஜித் வீட்டிற்கு நேரடியாக சென்ற சூர்யா & கார்த்தி.. தந்தை மறைவுக்கு துக்கம் விசாரிப்பு!