RAHUL GANDHI : உன் கூடவே பொறக்கணும்..!! தங்கை மீது அன்பை பொழிந்த ராகுல் காந்தி.. “என் அண்ணனை யாராலும் வாங்க முடியாது!” — பிரியங்கா நெகிழ்ச்சி!
முகப்பு > செய்திகள் > இந்தியாகாங்கிரஸின் தேசிய தலைவராக பதவி வகித்த ராகுல் காந்தி 2019 மக்களவைத் தேர்தலுக்கு பிறகு ராஜினாமா செய்தார். இதனால் சோனியா காந்தி கட்சியின் இடைக்கால தலைவராக நீடித்தார். பின்னர் புதிய தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்வு செய்யப்பட்டார்.
Also Read | மரணமடைந்த ஈரோடு MLA திருமகன் ஈவெரா.. ஒரு வகையில் பெரியாரின் கொள்ளுப் பேரனா..? - முழு விபரம்.!
இதனிடையே, செப்டம்பர் 7-ல் தொடங்கப்பட்ட ராகுல் காந்தி தலைமையிலான ‘பாரத் ஜடோ ஒற்றுமை யாத்திரை’ ஜனவரி 26-ல் ஜம்மு-காஷ்மீரில் சென்று நிறைவடையவுள்ளது. இதன் ஒரு அங்கமாக முன்னதாக டெல்லியில் இருந்து உத்தரபிரதேசத்திற்குள் யாத்திரை சென்றபோது, உத்தரபிரதேச காங்கிரஸ் பொறுப்பாளரான பிரியங்கா காந்தி யாத்திரையை வரவேற்றதுடன் அங்கு நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார்.
அதில் பேசியவர், “பாரத் ஜோடோ யாத்திரையை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். இந்த யாத்திரை 3 ஆயிரம் கிலோமீட்டர் நடைபயணத்துக்கு பின் உத்தரபிரதேசம் வந்துள்ளது. என் அன்பான மூத்த அண்ணாவை நினைத்து பெருமைப்படுகிறேன். ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் கொடுத்து தலைவர்களை விலைக்கு வாங்குகின்றனர். பொதுநிறுவனங்களை வாங்குகிறார்கள். ஊடகங்களை விலைக்கு வாங்குகிறார்கள். ஆனால், எனது அண்ணா உன்னை வாங்க முடியவில்லை. யாராலும் வாங்கவும் முடியாது.” என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும் ராகுல் காந்தி தன் தங்கை பிரியங்கா காந்தியை பாசமாக கட்டிக்கொண்டு முத்தமிட்ட நெகிழ்ச்சி படங்கள், இவர்களது சகோதரத்துவ உறவை பறைசாற்றும் வகையில் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.