ஆன்ட்ராய்ட் மொபைல் 'யூஸ்' பண்றவங்க 'எச்சரிக்கையா' இருக்க வேண்டிய நேரம்...! 'மொதல்ல உங்க மெசேஜ், கால் ஹிஸ்டரிய கண்காணிக்கும், அடுத்தது...' - இது எப்போ, யாருக்கு வேணும்னாலும் நடக்கலாம்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஆன்ட்ராய்ட் போன்களை உபயோகிப்பவர்களுக்கு எச்சரிக்கையாக இருக்கும் வண்ணம் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

மத்திய அரசின் கணினி தொடர்பான நெருக்கடி மேலாண்மை குழு CERT-In வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியாவில் பயன்படுத்தப்படும் ஆன்ட்ராய்ட் செல்போன்களில் 'Drinik' என்ற புதிய வகை மால்வேர் தாக்குதல் எப்போது வேண்டுமானாலும் தாக்கலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
அந்த மால்வேர் ஆன்ட்ராய்ட் போன்களில் ஊடுருவி வங்கி விவரங்களை முதலில் திருடும். இந்த மால்வேர் தாக்குதல் 27 இந்திய வங்கிகளின் வாடிக்கையாளர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுவதாக மேலாண்மை குழு தெரிவித்துள்ளது.
அதோடு, இந்த வைரஸ் தாக்கப்பட்டால் நமது செல்போனிற்கு வருமான வரித்துறை போல் போலி குறுஞ்செய்தி அனுப்பி அதன் வாயிலாக செல்போனுக்குள் ஹேக்கர்கள் ஊடுருவுகின்றனர்.
மேலும், குறுஞ்செய்தியில் உள்ள இணையதள முகவரிக்குள் உள்நுழைந்தபின் தரவிறக்கமாகும் செயலி, செல்போனின் எஸ்எம்எஸ், அழைப்பு விவரங்களை கண்காணிக்கத் தொடங்குமாம்.
அதன்பின், செல்போன் உபயோகிப்பவருடைய பான், ஆதார் எண், டெபிட் கார்டு விவரங்கள் உள்ளிட்ட வங்கி தொடர்பான விவரங்கள் திருடப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்..

மற்ற செய்திகள்
