'மாஸ்க்' அணிந்தபடி 'கடைக்குள்' நுழைந்த 'திருப்பதி' பெண்கள்!.. 'சிசிடிவி' கேமராக்களை 'உடைத்து' செய்த பரபரப்பு 'காரியம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | May 21, 2020 11:03 AM

கொரோனா காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 20-ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு கட்ட தளர்வுகளுடன் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது.

2 women breaks CCTV and try to steal in tirupati store amid lockdown

இதனை அடுத்து திருமலையில் உள்ள அனைத்து கடைகள், வணிக வளாகங்கள், ஹோட்டல்கள் வெகுவாக மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் திருமலையில் உள்ள கல்யாணி விடுதி பகுதியில் இருக்கும் மூடப்பட்ட கடை ஒன்றில், தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இரண்டு பெண் தொழிலாளர்கள் நுழைந்து திருட்டு சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர்.  முகத்தில் மாஸ்க் அணிந்துகொண்டு திருடுவதற்கு நுழைந்த 2 பெண்களுள் ஒருவர், சிசிடிவி கேமராவில் தாங்கள் திருடுவது படம் பிடிக்கப் படுவதால் பயந்துபோய் சிசிடிவி கேமராவை கல்லால் அடித்து உடைத்திருக்கிறார். ஆனால் அந்த கடையில் நாலாபுறமும் இருந்த சிசிடிவியில் இந்த சம்பவம் பதிவானது.

இதை அறிந்த கடை உரிமையாளர் திருமலை திருப்பதி தேவஸ்தான விஜிலன்ஸ் துறை அதிகாரிகளுக்கும், திருமலை 2வது காவல்நிலையத்திற்கும் அளித்த தகவலின் பேரில், போலீஸார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர். ஊரடங்கு காரணமாக, வேலை, வருமானங்களை இழந்த பலரும் வறுமையில் வாடுவதால் அதில் சிலர் அன்றாடத் தேவைகளை சமாளிக்கவும், எதிர்கால அச்சம் காரணமாகவும் இப்படியான திருட்டு வேலைகளில் இறங்கத் தொடங்குவதாகவும் பலர் இதுகுறித்து கருத்து கூறியுள்ளனர்.