'2017ல அந்த நாட்டு அதிபரை கொலை பண்ணிடணும்னு நெனைச்சேன்!'.. பெரிய குண்டை தூக்கிப் போட்ட அதிபர் டிரம்ப்!
முகப்பு > செய்திகள் > உலகம்சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத்தை 2017 ஆம் ஆண்டு கொலை செய்ய நினைத்தாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து பாஸ்க் நியூஸ் தொலைக்காட்சிக்கு டிரம்ப் அளித்த பேட்டியில் சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத்தை 2017 -ம் ஆண்டு கொல்ல நினைத்ததாகவும், ஆனால் அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் ஜிம் மேட்டிஸ் மறுத்ததால், அதை அவரது முடிவுக்கு விட்டுவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். சிரியாவில் கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக அதிபர் ஆசாத்துக்கும், ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடந்துவரும் மும்முனைச் சண்டை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், இதில் ஆசாத்துக்கு ரஷ்யாவும், கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்காவும் ஆதரவு அளித்தன.
ஐஎஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசின் கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டுள்ள நிலையில், கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள சில இடங்களில் அவ்வப்போது சண்டை நடந்து வருகிறது.இந்த நிலையில்தான் சிரிய போரில் ஆசாத்தின் அரசுப் படைகள் மற்றும் ரஷ்யா சேர்ந்து அப்பாவி மக்களை கொன்று குவித்ததாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.
சிரியாவில் நடக்கும் இந்த உள்நாட்டுப் போரில் லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளதும், லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
