'பிரபல வீரருக்கு அறுவை சிகிச்சை'...'குணமாக 4 வாரம் ஆகும்'... சோகத்தில் ரசிகர்கள்... வைரலாகும் ட்வீட்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Jeno | Aug 10, 2019 02:16 PM

இந்திய அணி வீரர் சுரேஷ் ரெய்னா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Suresh Raina underwent a knee surgery that will keep him out of action

ரசிகர்களால் சின்ன தல என அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா, கடந்த சில மாதங்களாக முழங்காலில் ஏற்பட்ட வலியால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அவருக்கு காலில் ஆப்ரேஷன் செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர்  4 வாரம் முதல் 6 வாரம் வரை ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள். இதுதொடர்பாக பிசிசிஐ, ரெய்னா மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, ரெய்னாவுக்கு இப்போது ஆப்ரேஷன் செய்யப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்தது. அவர் முழுமையாக குணமடைய 4-6 வாரங்கள் ஆகும். விரைவில் அவர் குணமடைய வாழ்த்துகிறோம்," என்று பதிவிட்டது.

கடைசியாக 2018ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் இடம் பெற்ற ரெய்னா, இதுவரை 18 டெஸ்ட் போட்டிகள், 226 ஒருநாள் போட்டிகளில் ஆடி 768 மற்றும் 5,615 ரன்கள் குவித்துள்ளார். 78 டி20 போட்டிகளில் ஆடிய ரெய்னா 1605 ரன்கள் குவித்துள்ளார். கடந்த 2019 ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே அணிக்காக ஆடிய அவர் 17 போட்டிகளில் இடம்பெற்று 383 ரன்கள் குவித்தார்.

முன்னதாக பிசிசிஐ வெளியிட்ட புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. அவர் விரைவில் குணமடைந்து திரும்ப வேண்டும் என பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.

Tags : #SURESHRAINA #CSK #KNEE SURGERY