ஆபத்தான உருமாறிய ‘லாம்ப்டா' வைரஸ்...! 'இது டெல்டா ப்ளஸை விட டேஞ்சர்...' எந்த நாட்டுல கண்டு பிடிச்சிருக்காங்க...? - பீதியாகும் உலக நாடுகள்...!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து தற்போது, ‘லாம்ப்டா’ என்ற வகை 30 நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.
இந்த வைரசால் இந்தியாவில் இதுவரை பாதிப்பு ஏற்படவில்லை. உலகத்தை கலங்கடித்து வரும் கொரோனா வைரஸ் பல்வேறு வகையில் உருமாறி, மக்களை இயங்க விடாமல் முடக்கி போட்டுள்ளது. இந்தியாவில் இரண்டாவது அலைக்கு முக்கிய காரணமாக இருந்த 'டெல்டா' வகை வைரஸ், தற்சமயம் உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளை நாசம் செய்து வருகிறது. இதன் காரணமாக, பல நாடுளில் இதுவரை இல்லாத அளவில் பாதிப்புகள், இறப்புகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் தற்போது டெல்டா வைரசின் பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ‘டெல்டா பிளஸ்’ வகை வீரியத்துடன் பரவி வருகிறது.
டெல்டா வைரஸை ஒப்பிடும் போது டெல்டா ப்ளஸ் வீரியம் அதிகமாக இருந்தாலும், குறைந்த அளவிலேயே பாதிப்பை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் இதுவரை டெல்டா ப்ளஸுக்கு குறைவான நபர்களே தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். கொரோனா மூன்றாவது அலை அக்டோபரில் உச்சகட்டமாக இருக்கும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதன் காரணமாக, இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் மூன்றாவது அலை எதிர்க்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக செயல்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், டெல்டா வகைகளை விட ஆபத்தான உருமாறிய ‘லாம்ப்டா’ என்ற புதிய வைரஸ் உருவாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரு நாட்டில்தான் இந்த வைரஸ் முதலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸுக்கு பெருவில் மே மற்றும் ஜூன் மாதங்களில் 82% பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பான் அமெரிக்க சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
இந்த லாம்ப்டா வைரஸ் தற்போது இங்கிலாந்திலும் பரவயிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு சென்று இங்கிலாந்து வந்த ஆறு பேருக்கு இந்த வைரஸ் உறுதியாகி உள்ளது. இந்த வைரஸுக்கு இதுவரை இந்தியாவில் யாரும் பாதிக்கப்பட்டுள்ளதாக எந்த பதிவும் இல்லை.
கடந்த நான்கு வாரத்தில் மட்டும் முப்பதிற்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த லாம்ப்டா வைரஸ் பரவி உள்ளது. இது மேலும் பல நாடுகளுக்கு பரவலாம் எனவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.