'கெட்ட பசங்க சார் அவங்க!'.. 'கொஞ்சம் விட்டிருந்தா'... கேப்டனுக்கே தெரியாமல்... தனியாக ஸ்கெட்ச் போட்ட 2 இளம் வீரர்கள்!.. அதிர்ந்து போன தவான்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manishankar | Jul 19, 2021 01:44 PM

இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர்கள் இருவர் வைத்திருந்த அசத்தல் திட்டம் குறித்து கேப்டன் ஷிகர் தவான் மனம் திறந்துள்ளார்.

shikhar dhawan in awe of prithvi shaw ishan kishan power hitting

இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி நேற்று கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, 262 ரன்களை எடுத்தது. அதையடுத்து விளையாடிய இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 263 ரன்களை எடுத்து 36 ஆவது ஓவரிலேயே வெற்றிப்பெற்றது. இந்தப் போட்டியில் இந்திய கேப்டன் ஷிகர் தவான் 86 ரன்கள் சேர்த்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இது குறித்து பேசிய கேப்டன் ஷிகர் தவான், 'அனைத்து வீரர்களும் விரைவாகப் போட்டியை முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் விளையாடினார்கள். இளம் வீரர்கள் அனைவரும் போட்டியின் சூழலுக்கு ஏற்ப விளையாடியது அற்புதமாக இருந்தது. பிட்ச் ஸ்பின்னுக்கு சாதகமாக இருந்தது. இந்திய அணியின் மூன்று ஸ்பின்னர்களும் சிறப்பாக பந்துவீசினர். அணியில் பலவீனம் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஐபிஎல் மூலம் பல திறமையான இளம் வீரர்கள் கிடைத்துள்ளனர். அவர்களுக்கு மன உறுதி அதிகமாக இருக்கிறது' என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், 'ப்ரித்வி ஷா, இஷான் கிஷன் இருவரும் போட்டியை 15 ஓவர்களுக்குள் முடிக்க வேண்டும் என்ற திட்டத்தில்தான் களத்திற்குள் வந்திருப்பார்கள் என நினைக்கிறேன். ஏனெனில், அவர்கள் தொடக்கம் முதலே அதிரடி காட்டினார்கள். என்னால் 100 ரன்கள் அடிக்க முடியவில்லை. வெற்றி இலக்கு இன்னும் கொஞ்சம் பெரியதாக இருந்திருந்தால் சதமடித்திருக்கலாம். நான் என்னுடைய திறமையைத் தொடர்ந்து மெருகேற்றிக்கொண்டு வருகிறேன். அடுத்து வரும் போட்டிகளிலும் ரன்களை குவிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது' என்று தெரிவித்தார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Shikhar dhawan in awe of prithvi shaw ishan kishan power hitting | Sports News.