‘ஹெலிகாப்டர்ல இருந்தபோது அப்பாகிட்ட கடைசியாக பேசினேன்’.. ‘ஆனா இப்படி நடக்கும்னு...!’உயிரிழந்த ராணுவ வீரரின் மகன் உருக்கம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஹெலிகாப்டர் விபத்துக்கு முன் கடைசியாக தனது தந்தையிடம் பேசியதாக உயிரிழந்த ராணுவ வீரர்களில் ஒருவரான ஹவால்தார் சத்பால் ராயின் மகன் உருக்கமாக பேசியுள்ளார்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கடந்த 8-ம் தேதி ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் அவரது மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.
இதில் குரூப் கேப்டன் வருண் சிங் மட்டும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு பெங்களூரில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களில் ஒருவரான ஹவால்தார் சத்பால் ராய் (Havaldar Satpal Rai) ஹெலிகாப்டரில் இருந்தபோது அவருடன் கடைசியாக பேசியதாக அவரது மகன் பிகல் ராய் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ‘அரசின் ஆதரவிற்கு நான் நன்றியுள்ளவனாக இருப்பேன். எனது தந்தை ஹெலிகாப்டரில் இருந்த போது நான் அவர்கள் கடைசியாக பேசினேன். இப்படி ஒரு விபத்து நிகழும் என்று கற்பனை செய்து கூட நான் பார்க்கவில்லை’ என உருக்கமாக தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
