குளுகுளு வெண்பனிபோல.. சீஸனின் முதல் பனிப்பொழிவு.. குளிர்ந்துபோன மக்கள்.. வைரல் வீடியோ.!
முகப்பு > செய்திகள் > இந்தியாஹிமாச்சல் பிரதேசத்தில் இந்த சீசனுக்கான முதல் பனிப்பொழிவு துவங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்நிலையில், வானிலிருந்து பனித்துகள்கள் விழும் ரம்யமான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Also Read | முகமது ஷமியின் 'கர்மா' கமெண்ட்.. அக்தர் போட்ட ரிப்ளை.. ட்விட்டரில் வலுக்கும் விவாதம்..!
இந்தியாவின் பிரபல சுற்றுலா தலங்களை தன்னிடத்தே கொண்டு விளங்குகிறது ஹிமாச்சல் பிரதேசம். மேற்கு இமாலய மலைத்தொடரில் அமைந்துள்ள இந்த மாநிலத்திற்கு மிக முக்கிய வருவாய் மூலமாக இருக்கிறது சுற்றுலாத்துறை. இம்மாநிலத்தில் அமைந்துள்ள மணாலி, ஷிம்லா ஆகிய இடங்கள் சுற்றுலா விரும்பிகள் இடையே மிகவும் வரவேற்பினை பெற்ற இடங்கள். அதுமட்டும் இன்றி. இங்கே பனிப்பொழிவை காணவும் மக்கள் ஏரளாமானோர் வந்து செல்கின்றனர்.
எப்போதும் குளிர் நிரம்பிய பிரதேசமான ஹிமாச்சல் பிரதேசத்தில் தற்போது இந்த சீசனுக்கான பனிப்பொழிவு துவங்கியிருக்கிறது. அம்மாநிலத்தின் நார்கண்டா பகுதி மக்கள் இந்த சீசனுக்கான பனிப்பொழிவை வரவேற்றிருக்கிறார்கள்.
ஷிம்லா மாவட்டத்தில் அமைந்துள்ள நார்கண்டா தற்போது வெள்ளை போர்வை போர்த்தியது போல காணப்படுகிறது. ஷிம்லா மாவட்டத்தில் அமைந்துள்ள நார்கண்டா-வில் கோடை காலத்திலேயே வெப்பநிலை 20 டிகிரி செல்ஸியஸை தாண்டுவது இல்லையாம். குளிர்காலத்தில் மைனஸ் 10 டிகிரி வரையில் வெப்பநிலை கீழிறங்கும் எனத் தெரிகிறது. பொதுவாக ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் இங்கே பருவமழை பொழிகிறது.
இதனையடுத்து, நவம்பர் துவங்கி மார்ச் வரையில் பனி தான். அதுவும் வெண் துகள்களாக வானிலிருந்து பனி கொட்டித்தீர்த்துவிடும். இந்த காலங்களில் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் இங்கே படையெடுக்கின்றனர். இந்நிலையில், நார்கண்டாவில் இந்த சீசனுக்கான பனிப்பொழிவு தற்போது துவங்கியுள்ளது. டெல்லி, ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக குளிர் அதிகரித்துவரும் நிலையில், நார்கண்டாவில் பனிப்பொழிவு துவங்கி இருப்பது, வட மாநிலங்களில் குளிர்காலம் துவங்கிவிட்டதை அறிவிக்கும் விதமாக அமைந்திருக்கிறது.
சாலைகளில், வீடுகளின் மேற்பரப்பில் வெள்ளித் துருவல்களாக பனி கொட்டி வருகிறது. இந்நிலையில், இந்த வீடியோக்கள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
#WATCH | Himachal Pradesh's Narkanda sees season's first snowfall pic.twitter.com/tTB6K91afo
— ANI (@ANI) November 14, 2022

மற்ற செய்திகள்
