"தோனி சொல்லியும் யாரும் கேக்கல".. கடைசி ஓவர் முன்னாடி நடந்தது என்ன??.. வைரலாகும் சோயிப் மாலிக் கருத்து.. T 20 WORLD CUP 2007!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலியாவில் வைத்து 8 வது டி 20 உலக கோப்பை தொடர் சமீபத்தில் முடிவடைந்திருந்த நிலையில், இறுதி போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றிருந்தது.
Also Read | 2 பெண்கள், 8 குழந்தைகளுடன்.. ஒரே வீட்டில் வாழும் நபர்.. அடுத்ததா போட்டுள்ள பிளான்.. வைரல் பின்னணி!!
முன்னதாக, பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகளும் தலா ஒரு முறை டி 20 உலக கோப்பையை கைப்பற்றி இருந்ததால் இந்த முறை வெல்லும் அணி இரண்டாவது முறையாக கோப்பையை வெல்லும் என்ற நிலை இருந்தது.
இதனைத் தொடர்ந்து, இறுதி போட்டியில் பென் ஸ்டோக்ஸ் மற்றும் சாம் குர்ரான் உதவியுடன் பாகிஸ்தான் நிர்ணயித்த இலக்கை எட்டி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, இரண்டாவது முறையாக டி 20 சாம்பியன் பட்டத்தையும் தட்டிச் சென்றது.
அதே போல, 50 ஓவர் உலக கோப்பைத் தொடரின் நடப்பு சாம்பியனாகவும் இங்கிலாந்து அணி தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, 2007 ஆம் ஆண்டு நடந்த முதல் டி 20 உலக கோப்பையின் இறுதி போட்டியில் நடந்த சம்பவம் குறித்து சோயிப் மாலிக் தற்போது பேசியுள்ள விஷயம் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
முதல் டி 20 உலக கோப்பையின் இறுதி போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதி இருந்தது. இந்திய அணி இந்த போட்டியில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து, இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி ஆடிய போது மிகவும் விறுவிறுப்பாக போனது. கடைசி கட்டத்தில் மிஸ்பா அதிரடியாக ஆடி கொண்டிருக்க, இறுதி ஓவரின் 3 வது பந்தில் கடைசி விக்கெட்டாக அவரும் போனதால் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி கோப்பையை கைப்பற்றி இருந்தது.
இன்றும் பல பேர் மத்தியில் ஞாபகத்தில் இருக்கும் மிக முக்கிய தருணம் இதுவாகும். இந்த போட்டியின் கடைசி ஓவரை இந்திய வீரர் ஜோகிந்தர் ஷர்மா வீசி இருந்தார். இந்த ஓவருக்கு முன்பு நடந்த சம்பவம் குறித்து ஒரு நிகழ்ச்சியில் பேசி இருந்த பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோய்ப் மாலிக், "இந்திய அணியின் முக்கிய பந்து வீச்சாளர்களுக்கு ஒரு ஓவர் மீதம் இருந்தது. நான் அவர்களின் பெயர்களை சொல்ல விரும்பவில்லை. அப்படி இருந்த போது கடைசி ஓவரை வீச தோனி அவர்களிடம் கேட்டுக் கொண்ட போது இறுதி ஓவரை யாரும் வீசவில்லை.
மிஸ்பாவுக்கு பந்து வீச அவர்கள் பயந்தனர். அவர் எல்லா இடத்திலும் அடித்து கொண்டிருந்தார். மிஸ்பா அடித்த ஸ்கூப் ஷாட் குறித்து தான் மக்கள் அனைவரும் பேசுகின்றனர். அது மட்டும் இறுதி விக்கெட்டாக இல்லாமல் இருந்திருந்தால் நேராக அதனை மிஸ்பா சிக்ஸ் அடித்திருப்பார். ஏற்கனேவே ஜோகிந்தரின் அதே ஓவரில் அவர் ஒரு சிக்ஸ் அடித்திருந்தார்" என சோயப் மாலிக் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து இந்த நிகழ்ச்சியின் நெறியாளர், ஒரு கேப்டனாக முழு கிரெடிட்டும் தோனிக்கு தான் என்றும் அவர் உலகின் பெஸ்ட் கேப்டன் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
Also Read | திருமணமாகி 3 மாசத்தில் கணவருக்கு ஸ்லோ பாய்சனா.?. தமிழகத்தை உலுக்கிய மனைவியின் வாட்ஸ் அப் சாட்.!