கொரோனா வடிவில் கொட்டித்தீர்த்த 'பனிக்கட்டி' மழை... 'அச்சத்தில்' உறைந்த மக்கள்... எங்கேன்னு பாருங்க!
முகப்பு > செய்திகள் > உலகம்உலகம் முழுவதையும் கொரோனா வெகுவேகமாக அச்சுறுத்தி வரும் சூழ்நிலையில் கொரோனா போல பனிக்கட்டி மழை பெய்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. சீனாவின் பீஜிங் மாகாணத்தில் தான் இந்த ஆலங்கட்டி மழை கடந்த 25-ம் தேதி பெய்துள்ளது.

இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன. இது பொதுவான ஒன்று தான் என வானிலை ஆய்வாளர்கள் கூறினாலும், கொரோனா போன்ற வடிவில் கூர்மையான முனைகளுடன் இருக்கும் இந்த ஆலங்கட்டி மழை மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுகுறித்து நெட்டிசன் ஒருவர் இது ஏன் கொரோனா வைரஸ் போல இருக்கிறது. இந்த வருடம் மிகுந்த கொந்தளிப்பாக இருக்கும் என தோன்றுகிறது என தெரிவித்து இருக்கிறார். மற்றொருவர், '' என்ன ஒரு விசித்திரமான ஆண்டு. இந்த ஆலங்கட்டி கற்கள் கொரோனா போல இருக்கின்றன,'' என பதிவிட்டு உள்ளார்.
இதேபோல கடந்த மே மாதம் மெக்சிகோ நகரத்திலும் கொரோனா வடிவில் ஆலங்கட்டி மழை பொழிந்தது. இதுகுறித்து அந்நகர மக்கள் இது கடவுளின் செயல் என தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
