'விலங்குகளுக்கு நடத்தப்பட்ட சோதனை வெற்றி'... 'இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி'... உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் மக்கள் !
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசிக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டுத் தலைமையகம் ஒப்புதல் அளித்துள்ளது, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகையே ஆட்டம் காணச் செய்துள்ள கொரோனா வைரஸை கட்டுப்படுத்த உலகநாடுகள் அனைத்தும் கடுமையாகப் போராடி வருகிறது. அதற்கான தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் அனைத்து நாடுகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. பல மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருந்தாலும், இதுவரை எந்த மருந்தும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இந்தச்சூழ்நிலையில் இந்தியாவின் புனேயை தலைமையிடமாகக் கொண்டுள்ள பாரத் பயோடெக் நிறுவனம் கொரோனாவுக்கு COVAXIN என்ற தடுப்பூசியைக் கண்டுபிடித்துள்ளது. தேசிய வைராலஜி நிறுவனம் மற்றும் ஐசிஎம்ஆருடன் இணைந்து இந்த மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்குப் பிறகு இந்த மருந்தானது விலங்குகளுக்குச் செலுத்தி பரிசோதனை செய்யப்பட்டுள்ளது..
இதில் கிடைத்த வெற்றி புதிய உற்சாகத்தை அளித்த நிலையில், இந்த தடுப்பூசிக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டுத் தலைமையகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து COVAXIN தடுப்பூசியை அடுத்தகட்டமாக மனிதர்களுக்குச் செலுத்தி பரிசோதனை செய்ய ஐசிஎம்ஆர் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த சோதனை நாடுமுழுவதும் அடுத்த மாதம் தொடங்க இருக்கும் நிலையில், இது மக்களிடையே புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
