“கொரோனோ நோயாளி இறந்துட்டாரு...14 லட்சம் பில் கட்டுங்க!” - ஷாக் கொடுத்த மருத்துவமனை!
முகப்பு > செய்திகள் > இந்தியாடெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனாவால் உயிரிழந்த நோயாளிக்கு ரூ .14 லட்சம் ரூபாய் மருத்துவ கட்டணத்தை அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரப்பிரதேச மாநிலம், டெல்லியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு நொய்டாவை சேர்ந்த யுனானி மருத்துவர் ஒருவர் கடந்த ஜூன் 7 தேதி அனுமதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்த நிலையில் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ளார்.
சிகிச்சை பெற்று வந்த 20 நாட்களில் சுமார் 15 நாட்கள் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டிருந்ததாக மருத்துவமனை அதிகாரிகள் மற்றும் பாதிக்கப்பட்டவரின் நெருங்கிய உறவினர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் தற்போது அவர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ள நிலையில் மற்றொரு இடியாக மருத்துவமனை அவரது குடும்பத்தாருக்கும் மருத்துவக் கட்டணமாக ரூ.14 லட்சம் ரூபாயை அடைக்க கூறியுள்ளது..
பின்னர் காப்பீடு ரூ .4 லட்சத்தை ஈட்டிய பின்னர் ரூ .10.2 லட்சமாக மாற்றப்பட்டது. மேலும் அவ்வளவு தொகை கட்ட இயலாத காரணத்தால் பேச்சுவார்த்தைக்கு பிறகு ரூ .10 முத்திரை காகிதத்தில் சட்டப்பூர்வமாக கையெழுத்து போட்டு, ரூ .25,000 செலுத்திய பிறகு இறந்தவரின் உடல் மருத்துவமனையில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த மருத்துவமனை நிர்வாகம் கூறிய போது கட்டண தொகை அனைத்தும் அரசாங்கத்தின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி சிஜிஹெச்எஸ் (மத்திய அரசு சுகாதாரத் திட்டம்) கட்டணங்களை அடிப்படையாகக் கொண்டவை எனக் கூறியுள்ளனர். மேலும் நோயாளியின் குடும்பத்திற்கு ஒவ்வொரு மருத்துவ சிகிச்சை விவரங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டது எனவும், விவரங்கள் CMO அலுவலகத்திலும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன எனவும் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.
மேலும் எங்கள் வெளிப்படையான பில்லிங் செயல்முறை, நோயாளியின் குடும்பத்தினருக்கு சிகிச்சையின் போது ஏற்படும் செலவுகள் குறித்து தெரிவிக்கப்படுவதை உறுதி செய்தது. இந்த வழக்கில் பில்லிங் செயல்பாட்டில் எந்த முரண்பாடும் இல்லை எனவும் மருத்துவமனை நிர்வாகம் அதன் அறிக்கையில் கூறியுள்ளது.

மற்ற செய்திகள்
