'அண்ணா, ஒரு சிகரெட் கொடுங்கன்னு டீ அல்லது பெட்டிக்கடையில் போய் வாங்க முடியாது'... வரப்போகும் அதிரடி சட்ட திருத்தங்கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Jan 07, 2021 12:50 PM

நாட்டின் புகையிலை பிடிப்பதைக் குறைக்கும் நோக்கில் பல்வேறு அதிரடி சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

Government looking to raise minimum age of cigarette smoking to 21

இந்தியாவில் தற்போது புகைபிடிப்பவர்களின் எண்ணிக்கை என்பது அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதில் இளைஞர்களும் புகை பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாவது என்பது அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் சிகரெட் மற்றும் இதர புகையிலைப் பொருட்கள் திருத்த மசோதா 2020 என்கிற வரைவு மசோதாவை மத்திய சுகாதார அமைச்சகம் தயாரித்துள்ளது. புகையிலைப் பொருட்கள் விளம்பரம், வர்த்தகம் முறைப்படுத்துதல், உற்பத்தி, விநியோகம் மற்றும் பகிர்வு சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளது.

அதன் அடிப்படையில் புகையிலை திருத்த மசோதாவின் மூலம் ஏற்கனவே உள்ள சடத்தின் உட்பிரிவில் 6 திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளது. புத்தகத்தைப்பிடிப்பவர்களின் வயதை 21 அதிகரிக்கப்படுகிறது. 21 வயதிற்குக் குறைவானவர்களுக்குப் புகையிலை விற்பனை செய்யவும் தடை செய்யப்பட்டுள்ளது. மீறுபவர்களுக்கு அபராதம் மற்றும் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

Government looking to raise minimum age of cigarette smoking to 21

மேலும் முக்கியமாக சிகரெட்டை சில்லறை விலையில் விற்கவும் தடை செய்யப்படுகிறது. சில்லறை விலையில் விற்பதால் சிகெரட் பாக்கெட் மேல் இருக்கும் எச்சரிக்கை வாசகம் அவர்களின் கவனத்திற்குச் சென்று சேர்வதில்லை. எனவே இந்த முடிவானது எடுக்கப்பட உள்ளது. அதேபோன்று பொது இடங்களில் புகை பிடிப்பவர்களுக்கு அபராதத்தை 200லிருந்து 2000 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கவும் மசோதாவில் வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

இதற்கிடையே  வயது குறைந்த நபர்களுக்குச் சட்டத்தை மீறி சிகரெட் விற்பனை செய்பவர்களுக்குத் தண்டனையை 2 ஆண்டுகளிலிருந்து 7 ஆண்டாக அதிகரிக்கவும், அபராதத்தை ஆயிரம் ரூபாயிலிருந்து ஒரு லட்சம் ரூபாயாக அதிகரிக்கவும் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.

Government looking to raise minimum age of cigarette smoking to 21

இதற்கிடையே விமான நிலையங்கள், விடுதிகள் உள்ளிட்ட பொது இடங்களில் புகைப்பிடிப்தற்கான பிரேத்யேக அறைகள் இருப்பதை நீக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. புகையிலை பொருட்களுக்கான வரைவு மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Government looking to raise minimum age of cigarette smoking to 21 | India News.