'வாடிக்கையாளர்களுக்கு கொரோனா வந்துச்சுன்னா ரூ.50,000 பரிசு...' 'அலையலையாக திரண்ட மக்கள்...' - சர்ச்சை விளம்பரத்தை வெளிட்ட கடை...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகடையில் பொருட்கள் வாங்கியவர்களுக்கு கொரோனா வந்தால் ரூ.50,000 பரிசு என கேரளாவின் ஒரு கடையில் அளிக்கப்பட்ட விளம்பரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்தது முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது ஒரு சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீடிக்கப்பட்டாலும் குறு சிறு வியாபாரிகள் முதல் பெரிய தகவல் தொழில் நுட்ப துறையினர் வரை பாதிப்படைந்து தான் வருகின்றனர்.
இந்நிலையில் கேரளாவில் இயங்கும் ஒரு மின்னணு பொருட்கள் விற்பனை கடையில் வெளியிடப்பட்ட விளம்பரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஊரடங்கால் சரிவை சந்தித்த விற்பனைகள் களைகட்ட ஒரு மின்னணு பொருட்கள் விற்பனை கடை உரிமையாளர் தங்கள் கடையில் ஷாப்பிங் செய்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டால் ரூ.50,000 பரிசு என விளம்பரம் அளித்துள்ளார்.
இந்த விளம்பரம் வைரலாகி அக்கடைக்கு மக்கள் வெள்ளமென திரண்டு, பொருட்கள் விற்பனையும் அள்ளியது. இந்த சம்பவம் குறித்து அறிந்த கோட்டயத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர், கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதி, இம்மாதிரியான நடவடிக்கைகள் கொரோனா மேலும் பரவ சந்தர்ப்பமாக அமையும் எனவும் இந்த சலுகை சட்டவிரோதமானது மற்றும் தண்டனைக்குரியது எனவும் குறிப்பிட்டிருந்தார்.
கடிதம் குறித்து அறிந்த கேரள முதல்வர் காவல் துறையினரை முடுக்கி சம்பந்தப்பட்ட கடை மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் சர்ச்சை விளம்பரம் அளித்த கடையை மூடி, உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.