'ஒரே நாளில் ராக்கெட் வேகத்தில் சென்ற பலி'... 'என்னதான் நடக்குது எங்க நாட்டுல'... உருக்குலைந்த அமெரிக்க மக்கள்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Jeno | Apr 20, 2020 09:01 AM

அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் வைரஸ் தாக்குதலுக்கு ஆயிரத்து 500 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Johns Hopkins : USA Coronavirus deaths top 40,000

உலகம் முழுவதும் 210 நாடுகளுக்குப் பரவியுள்ள கொரோனா கடும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது அமெரிக்காவைத் தும்சம் செய்து வருகிறது. நாட்டில் என்னதான் நடக்கிறது எனத் தெரியாமல் அந்த மக்கள் விழி பிதுங்கி பரிதாபமாக நிற்கிறார்கள். இந்நிலையில் அமெரிக்காவில் தற்போதைய நிலவரப்படி 7 லட்சத்து 64 ஆயிரத்து 303 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் புதிதாக 25 ஆயிரத்து 511 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தச்சூழ்நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் ஆயிரத்து 534 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளார்கள். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்து 548 ஆக அதிகரித்துள்ளது. இது அமெரிக்க மக்களை கடும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. தினம் தினம் என்ன நடக்குமோ எனப் பதை பதைப்பில் அவர்கள் நாட்களைக் கடத்தி வருகிறார்கள்.