அந்தரங்க வீடியோவை வைத்து மிரட்டிய FB காதலன்.. திருமணம் ஆன பெண் போட்ட திடுக்கிடும் திட்டம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஅந்தரங்க வீடியோக்களை வெளியிடுவதாக மிரட்டிய பேஸ்புக் காதலனுக்கு காதலியால் நேர்ந்த கொடுமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read | "அது அவ்ளோ தான்.. முடிஞ்சு போச்சு.." ஜடேஜா - சிஎஸ்கே பத்தி முன்னாள் வீரர் சொன்ன பரபரப்பு கருத்து..
ஆந்திர மாநிலம் ஹைதராபாத் அடுத்த அம்பர்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் புகைப்படக் கலைஞர் யாஸ்மா குமார் (32 வயது). பிரஷாந்தி ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்வேதா ரெட்டி (32 வயது). திருமணமான இவருக்கு பேஸ்புக் மூலம் யாஸ்மா குமார் நண்பராக அறிமுகமாகியுள்ளார்.
அப்போது செல்போன் எண்களை பகிர்ந்துகொண்ட இருவரும் அடிக்கடி நேரில் சந்தித்து பேசி வந்துள்ளனர். மேலும் அடிக்கடி வீடியோ கால் மூலமாகவும் இருவரும் பேசி வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் இருவரும் காதலர்களாக மாறியுள்ளனர். அந்த சமயத்தில் வீடியோ கால் பேசிய போது ஆடையின்றி ஸ்வேதா ரெட்டி தோன்றியுள்ளார். இந்த அந்தரங்க வீடியோ கால் அனைத்தையும் யாஸ்மா குமார் ரகசியமாக ரெக்கார்டு செய்துள்ளார்.
இதனை அடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என ஸ்வேதா ரெட்டியை யாஸ்மா குமார் கூறியுள்ளார். இல்லையென்றால் அந்தரங்க வீடியோவை வெளியிட்டு விடுவேன் என ஸ்வேதா ரெட்டியை மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஸ்வேதா ரெட்டி என்ன செய்வதென்று தெரியாமல் இருந்துள்ளார்.
இந்த சமயத்தில் பழக்கமாக மற்றொரு பேஸ்புக் நண்பரான அசோக் என்பவரிடம் இதுகுறித்து ஸ்வேதா ரெட்டி கூறியுள்ளார். இதனை அடுத்து கடந்த 4-ம் தேதி தனது நண்பர் கார்த்திக்குடன் ஸ்வேதாவின் வீட்டுக்கு அசோக் சென்றுள்ளார். அப்போது யாஸ்மா குமாரை போன் செய்து தந்து வீட்டுக்கு ஸ்வேதா ரெட்டி அழைத்துள்ளார்.
இதனை நம்பி ஸ்வேதா ரெட்டி வீட்டுக்கு வந்த யாஸ்மா குமாரை அசோக்கும் அவரது நண்பர் கார்த்திக்கும் சுத்தியலால் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த யாஸ்மா குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து அவரது உடலை சாலையில் வீசி விட்டு சென்றுள்ளனர். அடையாளம் தெரியாத சடலம் குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் இவை அனைத்தும் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் ஸ்வேதா ரெட்டி, அசோக் மற்றும் கார்த்திக் ஆகிய மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8