இங்க என்னங்க பண்ணிட்டு இருக்கீங்க...? 'சொந்தகாரங்க வீட்ல போய் செம தூக்கம்...' 'யாரோ வந்துருக்காங்கனு எந்திரிச்சு பார்த்தா...' - அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி...!
முகப்பு > செய்திகள் > இந்தியாசொந்தக்காரர் வீட்டில் சென்று தூங்கிய தேர்தல் அலுவலர் ஒருவர் சஸ்பென்ட் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாவட்டத்தில் நடைபெறும் தேர்தல் சமயத்தில் உலுபேரியா உத்தர் என்ற சட்டப்பேரவை தொகுதி தேர்தல் அலுவலர், தபன் சர்க்கார் என்ற திரிணமூல் காங்கிரஸ் தலைவர் ஒருவரின் வீட்டில், வாக்குப் பதிவு இயந்திரத்துடன் இரவில் உறங்கியுள்ளார். அவர் உறவினர் என்று கூறப்படுகிறது.
நன்றாக தூங்கிக்கொண்டிருந்தவர் திடீரென்று முழித்து பார்த்தபோது அதிர்ச்சியடைந்தார். தேர்தல் அதிகாரிகள் நின்றுக்கொண்டிருந்தனர். விஷயத்தை உறுதி செய்த உடனே அவரை சஸ்பென்ட் செய்து, அந்த நபரிடம் இருந்து வாக்குப்பதிவு இயந்திரமும் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் அவர் வைத்திருந்த வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் அதனுடன் இணைந்த விவிபாட் இயந்திரம் வாக்குப் பதிவுக்கு பயன்படுத்தப்படமாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த இயந்திரம் தேர்தல் பார்வையாளரின் கஸ்டடியில் தனி அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
