‘அதுல கொரோனா இருக்கு’... 'உங்க பொருட்கள் எங்களுக்கு வேணாம்’... ‘இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய’... ‘தடை விதித்து குற்றஞ்சாட்டிய சீனா’...!!!
முகப்பு > செய்திகள் > உலகம்இந்தியாவில் இருந்து சீனாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட மீன்களில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியபட்டு உள்ளதாக சீனா குற்றஞ்சாட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று உருவாகி பரவியதன் மூலம், உலகம் முழுவதும் பல்வேறு நாடுகள் பல இன்னல்களை அனுபவித்து வருகின்றன. கொரோனா வைரஸ் தொற்று பரவுதல் இன்னும் முடிந்த பாடில்லை. இதனால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, அனைத்து தரப்பினரும் வேலையின்றி, வழக்கமான வாழ்க்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வழியின்றி தவித்து வருகின்றனர்.
கொரோனா வைரஸ் பரவலால், உலக மக்கள் தங்களது சாதராண வாழ்க்கை திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். கொத்து கொத்தாய் மக்கள் மடிந்துள்ளனர். இந்நிலையில், இந்திய நிறுவனத்திடம் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மீன்களில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டதால், இறக்குமதிக்கு ஒருவாரம் தடை விதிப்பதாகச் சீனா தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் பாசு இன்டர்நேசனல் நிறுவனம் சீனாவுக்கு அனுப்பிய பதப்படுத்திய மீன்களில், மாதிரிகளை எடுத்துச் சோதனை செய்ததில், 3 மாதிரிகளில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டதாகச் சீனச் சுங்கத்துறை தெரிவித்துள்ளது. இதனால் அந்த நிறுவனத்திடம் இருந்து மீன்களை இறக்குமதி செய்ய ஒருவாரத்துக்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.