"மொத்தம் 62 SPOON".. கடும் வயித்து வலி.. இளைஞருக்கு ஆபரேஷன் செஞ்ச டாக்டர்ஸ்.. உள்ள எப்படி போச்சுன்னு காரணம் தெரிஞ்சு கதி கலங்கிட்டாங்க!!
முகப்பு > செய்திகள் > இந்தியாவயிற்று வலி என இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்களுக்கு கடும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது.

உத்தர பிரதேச மாநிலம், மன்சூர்பூர் நகரத்தை அடுத்து போபாடா என்னும் கிராமம் அமைந்துள்ளது.
இந்த கிராமத்தில் வசித்து வருபவர் விஜய். இவருக்கு தற்போது 32 வயதாகிறது. இதனிடையே, சமீபத்தில் கடும் வயிற்று வலி காரணமாக, முஷாபர் நகரில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, வயிற்று வலியால் அவதிப்பட்ட இளைஞர் விஜய்யை மருத்துவர்கள் பரிசோதித்துள்ளனர். அந்த சமயத்தில், அவரது வயிற்றில் ஏதோ வித்தியாசமான பொருள் இருப்பதையும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, இளைஞரின் சம்மதத்துடன் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளவும் மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.
இரண்டு மணி நேரம் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் தெரிவிக்கும் நிலையில், அவரது வயிற்றிற்குள் இருந்த பொருளைக் கண்டு மருத்துவர்கள் ஒரு நிமிடம் அதிர்ந்து போயுள்ளனர். இதற்கு காரணம், அவரது வயிற்றிற்குள் தலை இல்லாத ஸ்டீல் ஸ்பூன்கள் இருந்ததை கண்டு அவர்கள் பதற்றம் அடைந்துள்ளனர். மேலும், 2 மணி நேரம் நீடித்த அறுவை சிகிச்சையில், மொத்தம் 62 ஸ்பூன்களை அவர்கள் அகற்றியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
அறுவை சிகிச்சை முடிந்துள்ள நிலையில், இளைஞர் விஜய் தற்போது அவசர சிகிச்சை பிரிவில் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, ஸ்பூன்கள் வயிற்றில் இருந்தது தொடர்பாக இளைஞர் விஜய்யிடம், நீங்கள் இதனை சாப்பிடுவீர்களா என மருத்துவர்கள் கேட்டுள்ளனர்.
இதற்கு பதிலளித்த இளைஞர் விஜய், ஆம் என பதிலளித்து கடந்த ஒரு வருடமாக பசி எடுக்கும் போதெல்லாம் உணவு கிடைக்க தாமாதமாகும் பட்சத்தில், ஸ்பூன்களை சாப்பிடுவதை வழக்கமாக தான் மேற்கொண்டு வந்ததாகவும் மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இளைஞர் வயிற்றில் இருந்து அறுவை சிகிச்சை செய்து 62 ஸ்பூன்கள் எடுக்கப்பட்ட சம்பவம், கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மற்ற செய்திகள்
