"வயிறு வலி தாங்க முடியல".. போனில் கதறிய பெண்.. X-RAY ரிப்போர்ட்டை பார்த்துட்டு ஒருநிமிஷம் டாக்டருக்கே தலை சுத்திடுச்சு..!
முகப்பு > செய்திகள் > உலகம்அயர்லாந்து நாட்டில் வயிற்று வலியால் அவதிப்பட்ட பெண்மணியை பரிசோதித்த மருத்துவர்கள் ஒருகணம் திகைத்து போயிருக்கிறார்கள்.

வயிற்று வலி
அயர்லாந்து தலைநகர் டப்ளின் நகரத்தில் வசித்துவரும் 66 வயதான பெண்மணி ஒருவர் கடுமையான வயிற்று வலியால் துடித்திருக்கிறார். ஒருகட்டத்தில் வலியை தாங்கிக்கொள்ள முடியாத அவர் அருகில் உள்ள செயின்ட் வின்சென்ட் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு போன் செய்து விபரத்தை கூறியுள்ளார். அதன்பிறகு மருத்துவமனையில் அட்மிட் ஆனபோதுதான் கணக்கில்லாமல் பேட்டரிகளை விழுங்கிவிட்டதாகவும் அதன் காரணமாகவே வயிற்று வலி ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சுவதாகவும் அந்த பெண்மணி தெரிவித்திருக்கிறார்.
இதனையடுத்து மருத்துவர்கள் அவரை எக்ஸ்ரே எடுக்க அனுப்பினர். கொஞ்ச நேரத்தில் அந்த மருத்துவமனையில் இருந்த அனைத்து மருத்துவர்களும் அதிர்ச்சியில் உறைந்து போயினர். காரணம் அவரது வயிற்றில் 50 க்கும் மேற்பட்ட பேட்டரிகள் இருப்பது எக்ஸ்ரே எடுத்ததில் தெரியவந்திருக்கிறது. இயற்கையான முறையில் பேட்டரிகள் கழிவுகள் மூலம் வெளியேற ஒருவாரம் காத்திருந்தனர் மருத்துவர்கள். அப்படி 4 பேட்டரிகள் வெளியேறியுள்ளன.
அறுவை சிகிச்சை
அதன்பிறகு, அறுவை சிகிச்சை மூலமாக மீதமிருந்த பேட்டரிகளை அப்புறப்படுத்த மருத்துவர்கள் முடிவெடுத்தனர். இதையடுத்து வயிற்றுப் பகுதியில் துளையிட்டு, 46 பேட்டரிகளை மருத்துவர்கள் வெளியே எடுத்திருக்கின்றனர். அவரது மலக்குடலில் சிக்கியிருந்த 5 பேட்டரிகள் பின்னர் வெற்றிகரமாக வெளியே எடுக்கப்பட்டன. மொத்தமாக அந்த பெண்மணியின் வயிற்றில் இருந்து 55 பேட்டரிகள் எடுக்கப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. ஒரே நேரத்தில் இத்தனை பேட்டரிகளை அறுவை சிகிச்சை மூலமாக வெளியே எடுப்பது இதுவே முதல்முறை என்கிறார்கள் இந்த அறுவைகிச்சையில் பங்கேற்ற மருத்துவர்கள்.
சிக்கல்
மேலும், அதிர்ஷ்டவசமாக பேட்டரிகளின் வெளிப்புறம் சேதமடையவில்லை என்றும், ஒருவேளை அப்படி நடந்திருந்தால் அது மிகப்பெரிய சிக்கல்களை உருவாகியிருக்கும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுபற்றி பேசிய மருத்துவர் ஒருவர்,"தன்னை தானே தாக்கிக்கொள்ள வேண்டும் என இந்த அசாதாரணமான காரியத்தில் அந்த பெண் ஈடுபட்டிருக்கிறார். இது, நீண்டநாள் வலி உள்ளிட்ட பக்க விளைவுகளை ஏற்படுத்தகூடியது. பேட்டரிகளை நாம் சாதரணமாக எடைபோட கூடாது. ஆனால், அதிர்ஷ்டவசமாக அனைத்து பேட்டரிகளையும் நாங்கள் வெளியே எடுத்துவிட்டோம்" என்றார். இது அந்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மற்ற செய்திகள்
