'டாக்டர் எப்படி அந்த வார்த்தையை சொல்லலாம்'... 'பேசிக்கொண்டிருக்கும் போதே பளார் விட்ட பெண் செவிலியர்'... வைரலாகும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாசெவிலியரும் மருத்துவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்திர பிரதேசத்தில் கொரோனா பெருந்தொற்று காட்டுத் தீயாய் பரவி வருகிறது. அங்குள்ள மருத்துவமனைகள் அனைத்தும் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. ஆக்சிஜன் பற்றாக்குறை, மருத்துவ கட்டமைப்பு முறையாக இல்லாததால் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க முடியாமல் மருத்துவர்கள் திணறி வருகின்றனர்.
இந்நிலையில் ராம்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் நேற்றைய தினம் பணியிலிருந்த மருத்துவர் மற்றும் செவிலியர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மருத்துவர் ஒருவர் செவிலியரைப் பார்த்துத் தகாத வார்த்தைகளால் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த செவிலியர் மருத்துவரை பளார் எனக் கன்னத்தில் அறைந்தார்.
இதனால் கோபமடைந்த மருத்துவர் அந்த பெண் செவிலியரைத் திருப்பி தாக்கியதில் மருத்துவமனை களேபரம் ஆனது. இதற்கிடையே பெண் செவிலியர் மற்றும் மருத்துவரிடம் மாவட்ட நீதிபதி விசாரணை நடத்தினார். அப்போது பணிச்சுமை காரணமாக ஏற்பட்ட மன அழுத்தமே மோதலுக்குக் காரணம் என்று இருவரும் கூறியுள்ளனர்.
ஒரு புறம் கொரோனா காரணமாக மருத்துவமனையில் நோயாளிகள் குவிந்து வரும் நிலையில், மருத்துவர்கள் செவிலியர்கள் மனஅழுத்தத்திற்கு ஆளாகி மோதலில் ஈடுபட்டிருப்பது அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
