‘தல’ தோனி இல்லை... பிசிசிஐ வெளியிட்ட பட்டியல்... தோனியின் எதிர்காலம்?... சந்தேகம் கிளப்பும் ரசிகர்கள்... தமிழக வீரரும் இல்லை!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Jan 16, 2020 03:41 PM

இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடும் வீரர்களுக்கான (சீனியர் பிரிவு) வருடாந்திர ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது. அதில் கடந்த அக்டோபர் 2019 முதல் வரும் செப்டம்பர் 2020 வரையிலான காலகட்டத்திற்கு வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதில் ஒப்பந்த செய்யப்படும் வீரர்களே இந்திய அணியில் இடம் பிடிக்க முடியும்.

 

MS Dhoni Dropped on BCCI\'s Salary Annual Player Contract

இந்நிலையில், இந்தப் பட்டியலில் முன்னாள்  கேப்டனும், மூத்த வீரருமான மகேந்திர சிங் தோனி பெயர் இடம்பெறாதது அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. ஆண்டுதோறும் இந்திய கிரிக்கெட் வீரர்களை, ஏ பிளஸ், ஏ, பி, சி என்று 4 பிரிவுகளில் பிசிசிஐ தரம் பிரித்து அவர்களை ஒப்பந்தம் செய்து வருகிறது. இந்தப் பட்டியலின் படி பிரிக்கப்பட்ட வீரர்களுக்கு ஆண்டுதோறும் சம்பள ஒப்பந்தம் செய்யப்படுகிறது. அதன்படி,

1. கிரேடு A+ (ஆண்டுக்கு 7 கோடி ரூபாய் சம்பளம்): விராத் கோலி, ரோஹித் சர்மா, பும்ரா.

2. கிரேடு A (ஆண்டுக்கு 5 கோடி ரூபாய் சம்பளம்): அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, புவனேஸ்வர் குமார், புஜாரா, ரகானே, கே.எல்.ராகுல், ஷிகர் தவான், முகமது ஷமி, இஷாந்த் சர்மா, குல்தீப் யாதவ், ரிஷப் பந்த்.

3. கிரேடு B (ஆண்டுக்கு 3 கோடி ரூபாய் சம்பளம்): விர்திமான் சகா, உமேஷ் யாதவ், உஸ்வேந்திர சாகல், ஹர்திக் பாண்டியா, மயங்க் அகர்வால்

4. கிரேடு C (ஆண்டுக்கு 1 கோடி ரூபாய் சம்பளம்): கேதர் ஜாதவ், நவ்தீப் சைனி, தீபக் சாகர், மணீஷ் பாண்டே, ஹனுமா  விகாரி, ஷர்துல் தாக்கூர், ஷ்ரேயாஸ் அய்யர், வாஷிங்டன் சுந்தர்.

கடந்த ஆண்டு வரை A கிரேடு பட்டியலில் இருந்த தோனி, இந்த ஆண்டில் எந்தப் பிரிவிலும் தோனியின் பெயர் இடம் பெறவில்லை. உலகக் கோப்பை தொடரில் கடந்த ஜூலை 10-ம் தேதி நடந்த, நியூசிலாந்து அணிக்கு எதிரானப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தப் பிறகு தோனி விளையாடமால் ஓய்வு எடுத்து வருகிறார். தற்போது அவரது சம்பள ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாததால், அவரது எதிர்காலம் குறித்து எங்கே தோனி என ரசிகர்கள் சந்தேகம் கிளப்பி வருகின்றனர்.

மார்ச் இறுதியில் தொடங்கவுள்ள ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி சார்பாக தோனி விளையாடவுள்ளார். இதில் நன்றாக விளையாடினால் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் அவர் இடம்பெற வாய்ப்புள்ளது என்று இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், தற்போது இந்தப் பட்டியல் அவரது ரசிகர்களை அதிர்க்குள்ளாக்கியுள்ளது. மேலும், தோனியுடன், தினேஷ் கார்த்திக், கலீல் அகமது, ஓய்வை அறிவித்து பின்னர் வாபஸ் வாங்கிய அம்பதி ராயுடு ஆகியோரின் பெயரும் இல்லை.

Tags : #MSDHONI #BCCI #VIRATKOHLI #ICCWORLDCUP2019 #SOURAVGANGULY #SALARY #CONTRACT #GRADE #RELEASED