பிசிசிஐ-யின் பட்டியலில் ட்ராப் அவுட்... ரசிகர்களின் எமோஷனல் ட்வீட்... ட்ரெண்டாகும் ‘தல’ தோனி...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இந்திய வீரர்களுக்கான வருடாந்திர ஒப்பந்த பட்டியலில் தோனி இடம்பெறாததை அடுத்து, அவரது ரசிகர்கள் ட்விட்டரில் தேங்யூ தோனி என்று ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
கடந்த 2019-ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை தொடருக்குப் பின்னர், மூத்த வீரர் தோனி இந்திய அணியில் இடம்பெறவில்லை. தோனி இந்திய அணியில் இடம்பெறாமல் இருந்தது அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியது. ஒவ்வொரு போட்டித் தொடரிலும் வீரர்களின் பெயர் பட்டியல் அறிவிக்கப்படும் போதும், தோனியின் பெயர் நிச்சயம் இடம் பெற்றுவிடும் என நம்பிக்கையோடு அவரது ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கும் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. இந்நிலையில் 2019 அக்டோபர் முதல் 2020 செப்டம்பர் வரையிலான பிசிசிஐயின் ஒப்பந்த பட்டியலானது இன்று வெளியிடப்பட்டது. அந்த பட்டியலில் தோனியின் பெயர் இடம்பெறாதது அவரது கிரிக்கெட் வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டதாகவே கூறப்பட்டு வருகிறது. இதையடுத்து, 3 உலகக் கோப்பைகளை வென்ற முன்னாள் கேப்டன் தோனிக்கு நன்றி சொல்லி, ட்விட்டரில் ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
இந்நிலையில், தோனியின் ரசிகர்கள் பிசிசிஐ நிர்வாகத்தை வறுத்தெடுத்து வருகின்றனர். இதையடுத்து, பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் தோனி ஏன் இந்த ஒப்பந்தத்தில் சேர்க்கப்படவில்லை என்று கூறியுள்ளார். அதில், தோனி தற்போது விளையாடமல் இருப்பதால், அவரை ஒப்பந்தத்தில் தற்காலிகமாக சேர்க்கவில்லை என்றும், ஏற்கனவே தோனியிடம் இதுகுறித்த பேசியதாகவும் கூறியுள்ளார். ஆனால், யார் தோனியிடம் இதகுறித்து பேசினார்கள் என்பதைக் கூற அவர் மறுத்துவிட்டார்.
Retweet if you are missing Jersey No. 7😓#INDvAUS #Dhoni #TeamIndia pic.twitter.com/1XWngP5cel
— MS Dhoni Fans Official (@msdfansofficial) January 14, 2020
Throw back when Dhoni didn't let Tiranga touch the earth.. 🇮🇳
What a man"! 😭
You'll always be our captain. ❤#ThankYouDhoni #MSDhoni #captaincool #Thala #Dhoni pic.twitter.com/PeyADCNyzh
— Pandey jee 🇮🇳 (@Im__AmBuJ) January 16, 2020
I have never seen Dhoni in Bollywood Party, Weekend Party, Pub and New Year Parties.
But,
He spotted with "Balidaan Insignia" on Mobile Cover, Hat and Gloves.
And He's the only Cricketer to serve in the Indian Army and Participated in Army stunts in Kashmir.#ThankYouDhoni pic.twitter.com/JGzT1YnHRa
— Nisha Jha (@IndiaNisha18) January 16, 2020
So his career ended the same way it started. Poetic.
MS Dhoni (2004-2019)#ThankyouDhoni pic.twitter.com/jWzVojGW0V
— ` (@FourOverthrows) January 16, 2020