வெறுங்காலோட உணவு டெலிவரி.. அதுக்கான காரணத்த சிரிச்சுக்கிட்டே சொன்ன ஊழியர்.. "ஆனா அத கேட்டவங்க கலங்கி போய்ட்டாங்க"
முகப்பு > செய்திகள் > இந்தியாஇன்றைய காலகட்டத்தில், ஆன்லைன் மூலம் உணவு, உடை, மளிகை பொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் பெரும்பாலானோர் ஆர்டர் செய்து வருகின்றனர்.
Also Read | "வாங்க Vibe பண்ணலாம்".. உச்சகட்ட பரவச நிலையில் தாத்தா.. "எல்லாத்துக்கும் அந்த ஒரு பாட்டு தாங்க காரணம்"..
நேரடியாக உணவகம் அல்லது கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்கி வருவதை விட, வீட்டில் இருந்த படியே தங்களுக்கு தேவையான பொருட்களை மெதுவாக பார்த்து பார்த்து ஆர்டர் செய்து வாங்கி வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக, பெரும்பாலான நகர பகுதிகளில், உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் எக்கச்சக்கமானோர் நிறைய இடங்களில் தென்படுவதை நாம் பார்த்திருப்போம். அந்த அளவுக்கு நாளுக்கு நாள் நிறைய பேர், ஆன்லைன் மூலம் உணவை ஆர்டர் செய்வதையே வழக்கமாக கொண்டுள்ளனர்.
அதே போல, இணையத்தில் கூட அடிக்கடி பல டெலிவரி ஊழியர்கள் குறித்து ஏராளமான சுவாரஸ்ய கதைகள் வைரலாகி, பலரது கவனத்தையும் பெறும். அந்த வகையில், தற்போது உணவு டெலிவரி ஊழியர் ஒருவரை பற்றிய செய்தி, ஏராளமானோரை மனம் உருக வைத்துள்ளது.
தாரிக் கான் என்ற நபர் ஒருவர் தன்னுடைய Linkedin பக்கத்தில், ஸ்விகி நிறுவனத்தின் உணவு டெலிவரி ஊழியர் தொடர்பான செய்தி ஒன்றை பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பகிர்ந்த பதிவில், ஸ்விகி டெலிவரி ஊழியர் ஒருவர் வெறுங்காலுடன் வந்ததை எலிவேட்டரில் வைத்து தாரிக் கான் பார்த்துள்ளார். அப்போது அவரிடம் ஏன் நீங்கள் செருப்பு எதுவும் அணியாமல் பணிபுரிகிறீர்கள் என கேட்டுள்ளார். இதற்கு பதில் அளித்த அந்த டெலிவரி ஊழியர், அன்றைய தினத்தில் தனக்கு ஒரு விபத்து நிகழ்ந்ததாகவும் இதன் காரணமாக அவரது கால் மற்றும் கணுக்கால் பகுதியில் வீக்கம் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்.
இதற்கு மீண்டும் கேள்வி கேட்ட தாரிக், வீக்கம் உள்ளதென்றால் நீங்கள் ஓய்வு எடுத்துக் கொண்டு வேலை பார்க்காமல் இருக்கலாமே என்றும் கேட்டுள்ளார். இதற்கு சிரித்துக் கொண்டே அந்த டெலிவரி ஊழியர் சொன்ன பதில் தான் தற்போது பலரையும் மனம் கலங்க வைத்துள்ளது.
உணவளிக்க ஒரு குடும்பம் தன்னை நம்பி உள்ளது என அந்த ஊழியர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அங்கிருந்து கிளம்பி செல்லும் போது மாலை வணக்கத்தையும் தாரிக்கிடம் தெரிவித்து அந்த ஊழியர் கூறிச் சென்றுள்ளார். இந்த சம்பவத்தை பகிர்ந்த தாரிக் கான், அந்த டெலிவரி ஊழியர்களை போன்றவர்கள் தான் தன்னை கடினமாக உழைக்கவும், தேவைப்படும் போது இன்னும் முன்னோக்கி இயங்கவும் தூண்டுகிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
விபத்து நிகழ்ந்து கால் உள்ளிட்ட பகுதியில் வீக்கம் இருந்த போதும் அதனை கொஞ்சம் கூட பொருட்டாக கருதாமல் தனது குடும்பத்தினருக்காக அந்த டெலிவரி ஊழியர் வெறுங்காலுடன் உழைத்த சம்பவம் தற்போது பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.