சிறுவர் காப்பகத்தில் 57 சிறுமிகளுக்கு கொரோனா...! 'அதுல 5 மைனர் சிறுமிகள் கர்ப்பம்...' அவங்க இங்க வரப்போவே கர்ப்பமாகி தான் வந்துருக்காங்க...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்திரபிரதேசத்தில் சிறுவர் காப்பகத்தில் 57 சிறுமிகளுக்கு கொரோனா தொற்றும், 5 சிறுமிகள் கர்ப்பமாக உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் ஸ்வரூப் நகரில் பெண்களுக்காக இயங்கும் காப்பகத்தில் கொரோனா அறிகுறிகளுடன் ஒரு சில சிறுமிகள் இருந்ததால் அக்காப்பகத்தில் இருந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் அக்காப்பகத்தில் இருக்கும் 57 சிறுமிகளுக்கு (மைனர்) கொரோனா பாசிட்டிவ் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் இவர்களில் 5 சிறுமிகள் கர்ப்பமடைந்துள்ளதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்ப்பமடைந்த சிறுமிகள் அனைவரும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து குழந்தை வன்கொடுமையால் போக்ஸோ சட்டத்தின் கீழ் குழந்தைகள் நல கமிட்டி மூலம் காப்பகத்திற்கு வந்திருந்தாலும் இந்த செய்தி அரசிற்கு அரசுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது அந்த காப்பகத்திற்கு சீல் வைக்கப்பட்டு ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் கர்ப்பமாக உள்ள 5 சிறுமிகளில் 3 பேர் ராமா மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டதாகவும் 2 பேர் ஹாலெட் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து மாவட்ட மேஜிஸ்ட்ரேட் பிரம்மதேவ் கூறும்போது, 'கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட சிறுமிகள் அனைவரும் கோவிட் 19க்கான பிரத்யேக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், கர்ப்பமடைந்த 5 மைனர் சிறுமிகள் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் போக்சோ சட்டத்தின் கீழ் குழந்தைகள் நல கமிட்டியின் உத்தரவுகளின் பேரில் அழைத்து வரப்பட்டனர். மேலும் அவர்கள் இங்கு வரும்போதே கருத்தரித்திருந்தனர்' என்று கூறினார்.