இந்த 'வெப்சைட்' உள்ள போனீங்கன்னா... 'பக்கத்துல எந்த ஹாஸ்பிட்டல்ல காலி பெட் இருக்குன்னு...' - எல்லா தகவல்களும் ஈஸியா தெரிஞ்சிடும்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் கொரோனா வைரஸ் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வரும் நிலை நோயாளிகள் படாத பாடுபட்டு வருகின்றனர்.

நோயாளிகளின் அருகாமையில் எந்த மருத்துவமனையில் காலி படுக்கைகள் உள்ளது என்பதை உடனே தெரிய முடியாத சூழல் நிலவியது. எனவே படுக்கை இருக்கும் மருத்துவமனையை கண்டடைவதற்குள் மக்களிடையே மேலும் பதற்றம் உருவானது.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் உறவினர் படுக்கைக்காக எந்த மருத்துவமனைக்கு அழைப்பு விடுத்தாலும் படுக்கை இல்லை என்ற பதிலே வருவதாக தெரிவித்திருந்தனர். முக்கியமாக பொது மக்களுக்கும் எந்தெந்த மருத்துவமனைகளில் படுக்கைகள் உள்ளன என்பது தெரியவில்லை.
அதோடு தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை இலவசமாக அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டிருக்கும் நிலையில், எந்தெந்த மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை என்பது தெரியாமல் நோயாளிகளை ஆம்புலன்ஸில் வைத்துக் கொண்டு மக்கள் திண்டாடிக் கொண்டிருகின்றனர்.
பொதுமக்களின் இந்த பிரச்சனையை தீர்க்கும் வகையில் தமிழக அரசு https://tncovidbeds.tnega.org/ என்ற இணையதளத்தை உருவாக்கியுள்ளது.
இதில், எந்த மருத்துவமனையில் படுக்கை வசதிகள் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். இது, நோயாளிகள் மருத்துவமனைகளின் வாசல்களில் ஆம்புலன்சிஸில் காத்திருக்கும் நிலை தவிர்க்க உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது. அரசு மருத்துவமனை மட்டுமல்லாமல் தனியார் மருத்துவமனைகளில் படுக்கை இருக்கிறதா என்பதையும் தெரிந்து கொள்ள முடியும்.

மற்ற செய்திகள்
