'பரோட்டா ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி'.... 'இது கொஞ்சம் கூட நியாயம் இல்ல'... 'அதிர்ந்த ட்விட்டர்'... வெடித்த புதிய சர்ச்சை!
முகப்பு > செய்திகள் > இந்தியாபரோட்டாவிற்கு 18 சதவீதம் வரி விதித்திருப்பது, பல்வேறு தரப்பினரிடம் கடும் எதிர்ப்புகளைக் கிளப்பியுள்ளது. இது ட்விட்டரில் #handsoffparotta என்ற ஹேஸ்டாக் மூலம் பலரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள்.

தமிழகம், கேரளா மற்றும் தென்னிந்திய மாநிலங்களில் பரோட்டா மிகவும் விரும்பிச் சாப்பிடும் உணவாக உள்ளது. அதிலும் அசைவ பிரியர்களின் முக்கிய விருப்பமாக இருப்பது பரோட்டா தான். அதிலும் பரோட்டாவில் சால்னாவை ஊற்றிச் சாப்பிடும் போது அதில் இருக்கும் சுவை நிச்சயம் அலாதியானது. பரோட்டா உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் உணவு என்ற கருத்து நிலவி வந்த போதிலும், அதற்கான மவுசு என்பது சற்றும் குறையவில்லை.
இந்நிலையில் பரோட்டாவுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் ரொட்டிக்கு 5 சதவீத ஜிஎஸ்டி மட்டுமே விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதே பிரிவைச் சேர்ந்த பரோட்டாவுக்கு மட்டும் ஏன் இவ்வளவு அதிகமான வரி விதிக்கப்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது. இது சமூகவலைத்தளங்களில் கடும் விவாத பொருளாக மாறியுள்ளது.
பெங்களூரைச் சேர்ந்த ஐடி பிரெஷ் ஃபுட் என்ற நிறுவனம், கோதுமை பரோட்டா, மலபார் பரோட்டா போன்ற உணவுகளுக்கான ஜிஎஸ்டி வரி குறித்து Authority for Advance Rulings அமைப்பிடம் வழக்கு தொடர்ந்தது. இந்த அமைப்பானது ஜிஎஸ்டி சம்பந்தமான புகார்களை விசாரித்து முடிவெடுக்கும் மத்திய அரசின் அமைப்பாகும். இந்த அமைப்பு வழங்கிய தீர்ப்பில், பரோட்டா என்பது, 18 சதவீத வரி விதிக்கப்படும் உயர்தர உணவு வகைகளில் ஒன்று எனவும், அது 5 சதவீத வரி வசூலிக்கப்படும் சப்பாத்தி மற்றும் ரொட்டி வகைகளில் சேராது எனவும் தீர்ப்பளித்துள்ளது.
ரொட்டிக்கு மட்டும் 5 சதவீத வரி விதித்துவிட்டு அதே வகையைச் சேர்ந்த, தென்னிந்திய உணவான பரோட்டாவுக்கு மட்டும் ஏன் 18 சதவீத வரி விதித்தார்கள் எனப் பலரும் கேள்வி எழுப்பியுள்ளார்கள். பரோட்டா, ரொட்டி ஆகிய இரண்டுமே மைதா மாவிலிருந்துதான் தயாரிக்கப்படுகின்றன. அப்படி இருக்கப் பரோட்டாவுக்கு மட்டும் ஏன் பாரபட்சம் எனப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இதுகுறித்து ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் #handsoffparotta என்ற ஹேஸ்டாக் வரலாகியுள்ளது.

மற்ற செய்திகள்
