‘11 மணிநேர காத்திருப்பு’.. ‘எதிர்பாராத முடிவுகள்’.. சோகமாக வெளியேறிய பொன்.ராதாகிருஷ்ணன்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Selvakumar | May 23, 2019 11:06 PM
கன்னியாகுமரி தொகுதியில் பின்னடைவை சந்தித்தால் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் மனமுடைந்துள்ளார்.
மக்களவை தேர்தலில் பாஜக தனிபெரும்பான்மையுடன் முன்னிலை வகித்து வருகிறது. ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை போட்டியிட்ட ஒரு பாஜக வேட்பாளர்களும் வெற்றி பெறவில்லை. பாஜக சார்பாக கன்னியாகுமரி தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் களமிறங்கி இருந்தார். அதே தொகுதியில் இவரை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளர் வசந்தக்குமார் போட்டியிட்டு இருந்தார்.
இதனால் காலையிலேயே வாக்கு எண்ணும் மையத்திற்கு பொன்.ராதாகிருஷ்ணன் வந்துவிட்டார். இதில், முதல் சுற்று முதலே காங்கிரஸ் வேட்பாளர் வசந்தக்குமார் முன்னிலை வகித்து வந்தார். அடுத்து வந்த சுற்றுகளின் முடிவில் தொடர்ந்து வசந்தக்குமார் முன்னிலை வகித்து வந்தார். இதனால் வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஒரு ஓரமாக தனியாக அமர்ந்து செல்போனில் தேர்தல் நிலவரங்களை பார்த்துக் கொண்டு இருந்துள்ளார்.
இந்நிலையில் பெரும் பின்னடைவை சந்தித்தால் வாக்கு எண்ணிக்கை மையத்தில் இரவு 8 மணிவரை தனியாக அமர்ந்து இருந்தவர் சோகமாக அங்கிருந்து புறப்பட்டு சென்றார். சுமார் 11 மணிநேரம் வாக்கு எண்ணும் மையத்திலேயே அமர்ந்திருந்துள்ளார்.