எல்லாரும் சேர்ந்து 'நாடகம்' ஆடிட்டாங்க...! 'வெளியாகியுள்ள முக்கிய சிசிடிவி காட்சி...' ஆர்யன் கான் வழக்கில் 'சினிமா திரைக்கதை'ய மிஞ்சும் அளவிற்கு 'அதிரடி' திருப்பம்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஷாருக்கான் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் மொத்தமும் நாடகம் என மராட்டிய மந்திரி நவாப் மாலிக் பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றைக் கூறியுள்ளார்.
கடந்த மாதம் அக்டோபர் 3-ஆம் தேதி மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்தியதாக ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், ஆர்யன்கானை கைது செய்ததே ஒரு நாடகம் தான் எனவும், கப்பலில் நடத்தப்பட்ட சோதனை போலியானது என மராட்டிய மந்திரி நவாப் மாலிக் போதைப்பொருள் தடுப்பு பிரிவு மும்பை மண்டல இயக்குனர் சமீர் வான்கடே மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைக் கூறி வந்தார்.
தற்போது இவ்வழக்கில், பொது சாட்சியான பிரபாகர் சாயிலும் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதில், போதைப்பொருள் வழக்கில் ஆர்யன் கானை விடுவிக்க ரூ.25 கோடி பேரம் நடந்ததாக தெரிவித்துள்ளார்.
மும்பை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் பிரபாகர் சாயிலின் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர். இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் பிரபாகர் கூறியது போல கடந்த 3-ந் தேதி லோயர் பரேல் பகுதியில் உள்ள வணிக வளாகம் அருகில் ஷாருக்கானின் மேலாளர் பூஜா தத்லானி, கிரன் கோசவி மற்றும் சாம் டிசோசா ஆகியோர் சந்தித்ததை உறுதிப்படுத்தியுள்ளனர்.
அவர்கள் சந்திப்பு தொடர்பான சி.சி.டி.வி வீடியோ தற்போது கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், ஆனால் அவர்கள் என்ன, எது தொடர்பாக பேசியுள்ளனர் என தெரியவில்லையென கூறப்படுகிறது. மேலும், இது குறித்து விசாரிக்க சாம்டிசோசாவை தொடர்பு கொண்டோம். ஆனால் அவர் பதில் அளிக்கவில்லை எனவும் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதோடு, கிரன் கோசவியின் காரில் போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது. மேலும், அவர் மீது போலீஸ் போல நடித்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்ய உள்ளதாக மற்றொரு போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும், ரூ.25 கோடி பேரம் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக ஷாருக்கான் மேலாளர் பூஜா தத்லானி, ஆர்யன் கானிடம் விசாரணை நடத்தப்படும் என போலீசார் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.