ஆர்யன் கான் 'பிறந்தது'ல இருந்தே எனக்கு தெரியும்...! ஷாருக் மகனுக்கு 'உத்தரவாதம்' அளித்த பிரபல 'பாலிவுட்' நடிகை...! - சாட்சிக் கூண்டில் ஏறி ஒப்புதல்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஷாருக்கானுடன் பல படங்களில் நடித்த பிரபல நடிகை தான் ஆர்யன் கானுக்கு தனிநபர் உத்திரவாதமாக இருப்பதாக நீதிமன்றத்தில் ஆர்யனுக்கு ஜாமீன் வாங்கி கொடுத்த செய்தி வெளியாகியுள்ளது.

நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் பயன்படுத்திய குற்றத்திற்காக ஆர்யன் கான் உட்பட 8 பேர் அக்டோபர் 3-ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.
ஆர்யன் கான் கைது செய்யப்பட்டதில் இருந்து ஷாருக்கான் குடும்பம் பல வகையில் அவருக்கு ஜாமீன் பெற நீதிமன்றத்தில் போராடியது. ஆனால், இது போதைப்பொருள் குற்றம் என்பதால் நீதிமன்றம் ஆர்யன் கானுக்கு ஜாமீன் பெற முடியாமல் இருந்தது.
இந்நிலையில், பல மனுக்கள் தள்ளுபடி ஆன பிறகு மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த நிலையில் ஆர்யன் இன்று (30-10-2021) மும்பை ஆத்தார்வ சிறையில் இருந்தது ஜாமீனில் வெளியே வருகிறார்.
ஆர்யன் கானுக்கு ரூ. 1 லட்சம் மற்றும் ஒரு தனி நபர் உத்தரவாதத்தில் ஜாமீன் அளிக்கப்பட்டது. ஆர்யன் கானுக்கு தனிநபர் உத்தரவாதம் அளித்தவர் பிரபல பாலிவுட் நடிகை ஜூகி சாவ்லா. இவர் ஆர்யன் கானுக்காக மும்பை நீதிமன்றத்தில் ஆஜராகி, அவரது வழக்கறிஞர் சதீஷ் மான்ஷிண்டே ஜுகி மூலம் தான் ஆர்யன் கானுக்கு உத்தரவாதம் அளிப்பதாக கூறியுள்ளார். அதையடுத்து, நடிகை ஜூகி சாவ்லாவின் ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு சாட்சிக் கூண்டில் ஏறி ஒப்புதல் வாக்குமூலமும் அளித்துள்ளார்.
நடிகை ஜூகி சாவ்லாவிற்கு ஷாருக்கான் குடும்பத்திற்கும் பல ஆண்டுகளாக தொழில் முறையில் பழக்கம் இருப்பதாகவும், ஆர்யன் கானையும் நடிகை ஜூகிக்கு பிறந்ததில் இருந்தே தெரியும் எனவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

மற்ற செய்திகள்
