'அம்மா' 10 நிமிஷம் தான்பா உன்கூட பேச முடியும்...! 'ஜெயிலுக்கு வந்த வீடியோ கால்...' - 'மகனை' கண்டு உருகிய கௌரி கான்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாசிறையில் உள்ள ஆர்யன் கான் நேற்று சிறைத் துறை அனுமதியுடன் நேற்று 10 நிமிடம் தனது தந்தை ஷாருக்கான் மற்றும் தாய் கவுரி கானுடன் பேசியுள்ள செய்தி வெளிவந்துள்ளது.

சொகுசு கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றத்திற்காக போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மூலம் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். நீதிமன்ற விசாரணைக்கு பின் ஆர்யன் அக்டோபர் 3-ஆம் தேதி மும்பை ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 12 நாட்களாக சிறையில் இருக்கும் ஆர்யனுக்கு நேற்று ஜாமின் மனு நான்காவது முறையாக நிராகரிக்கப்பட்டது. அதோடு அக்டோபர் 20-ல் ஜாமின் மனு பற்றிய முடிவு அறிவிக்கப்படும் என நீதிமன்றம் கூறியது.
இந்நிலையில் நேற்று ஷாருக்கானும் அவரது மனைவி கௌரியும் சிறை அதிகாரிகள் கண்காணிப்பின் கீழ் 10 நிமிடம் வீடியோ கால் பேசியுள்ளார். இந்த சம்பவம் தற்போது செய்தியாக வெளிவந்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவியது முதல் சிறையில் இருக்கும் கைதிகள் தங்கள் குடும்பத்துடன் வாரம் இரு நாட்கள் வீடியோ காலில் பேச கோர்ட் அனுமதி தந்துள்ளது. அதனடிப்படையில் தான் நேற்று ஷாருக்கான் மற்றும் கௌரி தன் மகனிடம் பேசியுள்ளனர்.
அதுமட்டுமில்லாமல் சிறை கைதிக்களுக்கு அனுமதிக்கப்படும் ரூ.4,500 மணி ஆர்டரையும் ஷாருக்கான் அனுப்பியுள்ளார். இந்த பணத்தை சிறையில் இருப்பவர்கள் அங்கிருக்கும் கேண்டீனில் கிடைக்கும் பொருட்களை வாங்கி சாப்பிடுவதற்காக பயன்படுத்தலாம்.
நீதிமன்ற உத்தரவு வரும் வரை ஆர்யன் கானுக்கு வீட்டு உணவுகளோ, வெளி உணவுகளோ வழங்க அனுமதியில்லை என சிறைக் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
