வசமா சிக்கிக்கொண்ட ஆர்யன் கானுடன் 'செல்ஃபி' எடுத்த நபர்...! 'விசாரணையில் சிக்கிய முக்கிய தகவல்கள்...' யார் இவர்...? - திடுக்கிட வைக்கும் திருப்பங்கள்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாமும்பையிலிருந்து கோவா செல்லும் சொகுசுக் கப்பல் ஒன்றில் ரகசியமாய் நடைபெற்ற போதை விருந்தில், போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதான நபர்களில் ஆர்யன் கானும் அடங்குவார். ஷாருக் கானின் மகன் என்பதால் ஆர்யன் கைது இந்திய அளவில் பேசப்பட்டது.

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் கைதான தினத்தில் உடனிருந்த ஒருவர் அவருடன் கப்பலிலும், என்சிபி அலுவலகத்திலும் செல்ஃபி எடுத்துக்கொண்டார்.
என்சிபி அலுவலகத்தில் ஆர்யனுடன் ஒரு மொட்டைத்தலை நபரின் செல்ஃபி படம் சமூக ஊடகங்களில் வைரலானது. யார் அவர்? அவர் ஏன் அப்போது அங்கிருந்தார் என்று பல கேள்விகள் உருவாயின. குறிப்பாக மகாராஷ்டிர மாநில எதிர்க்கட்சியான தேசியவாத காங்கிரஸ் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தது.
இந்த நிலையில், கிரண் கோஸாவி என்சிபி அலுவலரோ அல்லது பணியாளரோ இல்லை என்றும், அக்டோபர் 2-ம் தேதி என்சிபி நடத்திய சோதனையில் சாட்சியாக கப்பலில் இருந்தார் எனவும் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே மோசடி வழக்கு அவர் மீது இருப்பதாகக் கூறி புனே காவல் துறையினர் லுக் அவுட் நோட்டீஸ் வெளியிட்டனர். அவரை காவல் துறையினர் வலை வீசித் தேடிவந்த நிலையில், தற்போது புனேவில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக அவர் உத்தரப் பிரதேசத்தில் சரணடைவதாகத் கூறியிருந்தார். ஆனால், அவர் தற்போது புனேவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிரண் கோஸாவி தன்னை ஒரு தனியார் டிடெக்டிவ் என அடையாளப்படுத்திக் கொள்கிறார் என்பது இந்த வழக்கில் குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த நபர் என்சிபி சார்பில் ஆர்யன் கானை விடுவிக்க மிகப்பெரிய தொகையைக் கேட்டு பேரம் பேசியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கிரணின் பாதுகாவலர் எனக் கூறும் பிரபாகர் செயில் தான் இந்த பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார்.
கிரன் கோஸாவி, ரூ.25 கோடி வரை பேரம் பேசியதாகவும் அதில் 7 கோடி ரூபாய் என்சிபி பிராந்தியத் தலைவருக்காகக் கேட்டதாகவும் பிரபாகர் செயில் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
இந்த நிலையில் கோஸாவி கைது, இந்த வழக்கில் பல்வேறு திருப்பங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற செய்திகள்
