'அப்பவே சொன்னாரு'.. 'இப்பதான் புரியுது'.. சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி இறப்புக்கு இதான் காரணம்னு!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Siva Sankar | Aug 27, 2019 04:09 PM
முன்னாள் மத்திய அமைச்சர்களான சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி என அடுத்தடுத்து பாஜக தலைவர்கள் மரணித்ததற்குக் காரணம், எதிர்க்கட்சிகள் தீய சக்திகளை ஏவிவிட்டதுதான் காரணம் என்று பாஜக எம்.பி பிரக்யா சிங் தாகூர் கூறியுள்ளார்.

அண்மையில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக எம்.பியும் பெண் சாமியாருமான பிரக்யா சிங் வெற்றி பெற்றார். முன்னதாக மும்பை குண்டு வெடிப்பில், இறந்துபோன ஐபிஎஸ் தன்னை தரக்குறைவாக நடத்தியதால் சாபம் விட்டதாகவும் அதனால் அவர் இறந்ததாகவும் கூறியிருந்தார். அதன் பின்னர் காந்தியக் கொன்ற நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர் என சொன்னார்.
இப்படி சர்ச்சைகளுக்கு பேர் போன பிரக்யா சிங், அண்மையில் பாஜக மூத்த தலைவர்களான சுஸ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி மற்றும் பபுல் கவூர் உள்ளிட்டோர் அடுத்தடுத்த மரணித்ததற்குக் காரணம் தனது குருநாதர் ஏற்கனவே சொல்லியிருந்ததுபடி, தீய சக்திகளை ஏவி பாஜகவை அழிக்கும் நோக்கத்துக்காக செய்ததாக இருக்குமோ என்கிற சந்தேகம் தனக்கு தற்போது வந்துள்ளதாக பேசியுள்ளார்.
