‘இனி வாரத்துக்கு 4 நாள் வேலை பாத்தா போதும்’.. ‘இந்தாங்க போனஸ்’.. சந்தோஷ ஷாக் கொடுத்த கம்பெனி!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Selvakumar | May 27, 2019 06:03 PM

இங்கிலாந்தில் உள்ள ஒரு நிறுவனம் பணியாளர்களுக்கு ஒரு அதிரடியான ஆஃபர் ஒன்றை வழங்கி ஆச்சரியப்படுத்தியுள்ளது.

UK company has switched over to a 4 day working week

இங்கிலாந்து நாட்டில் ப்ளைமவுத் என்னும் நகரில் போர்ட்க்யூளிஸ் லீகல்ஸ் என்கிற சட்ட ஆலோசனை நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு அந்நிறுவனம் ஒரு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. அது என்னவென்றால் வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டும் வேலை செய்தால் போதும் என அறிவித்துள்ளது. இந்த தகவலை அறிவிப்பதற்கு முன்பாக சம்பளத்தை உயர்த்தி பணியாளர்களை திக்குமுக்காட வைத்துள்ளது.

இது குறித்து தெரிவித்து இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர், நிறுவனம் வழங்கிய இந்த சலுகையால் பணியாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளனர். இதற்கு முன்னர் இல்லாததைப் போல ஊழியர்கள் உற்சாகமாக வேலை செய்கின்றனர். இதனால் வாடிக்கையாளர்களும் சிறந்த சேவையை பெறுகின்றனர் என தெரிவித்துள்ளார். நியூஸிலாந்தில் ஒரு நிறுவனம் இதைப் போன்றே செய்திருப்பதாகவும், அதைப் பார்த்துதான் இந்த ஐடியாவை சோதனை முயற்சியாக நடைமுறைப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags : #COMPANY #EMPLOYEES #OFFER #ENGLAND