‘10-ம் வகுப்பு பொதுத் தேர்வு தேதியில்’... ‘அதிரடி மாற்றம்’... ‘புதிய அட்டவணை வெளியீடு’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Sep 16, 2019 07:08 PM
பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வு தேதியில் மாற்றம் செய்து, புதிய தேர்வு தேதி அட்டவணையை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமையன்று, நடப்பு கல்வியாண்டு முதல் 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும், இனி பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. மேலும், இதுவரை 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில், தமிழ், ஆங்கிலம் மொழித்தாள்கள், தமிழ் 1, 2 மற்றும் ஆங்கிலம் 1,2 என்ற வகையில் தேர்வுகள் நடத்தப்பட்டது. நடப்பு கல்வியாண்டு முதல், இரு தாள்களாக தேர்வு எழுதும் முறை ரத்து செய்யப்பட்டு, தமிழுக்கு ஒரு தேர்வும், ஆங்கிலத்துக்கு ஒரு தேர்வும் மட்டுமே நடத்தப்படும் என்றும் கூறப்பட்டது.
இதற்கான அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேதியில் மாற்றம் கொண்டுவரப்பட்டு, புதிய அட்டவணையை பள்ளி கல்வித்துறை வெளியீட்டுள்ளது. அதன்படி, வரும் மார்ச் 27-ம் தேதி துவங்கி, ஏப்ரல் 13-ம் தேதிவரை தேர்வு நடைப்பெறுகிறது. தேர்வு முடிவுகள், வரும் மே மாதம் 4-ம் தேதி வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
