செம குட் நியூஸ்..! 3-வது டோஸ் கோவாக்சின் போடுறவங்களுக்கு... ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ள நம்பிக்கை தகவல்
முகப்பு > செய்திகள் > இந்தியாபுதுடில்லி: கொரோனா வைரஸ் பரவலுக்கு மீண்டும் மூன்றாவது டோஸ் கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் போது ஆன்டிபாடி அளவு அதிகரிப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.
கடந்த 2019-ஆம் ஆண்டு பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் 2022 புது வருடம் பிறந்தும் அதன் ஆட்டம் முடிந்தப்பாடில்லை. தற்போது கொரோனா வைரஸின் புதிய வெரியன்ட்டான ஒமைக்ரன் மூன்றாவது அலையாக பரவி வருகிறது.
இதுவரை பரவியது டெல்டா வைரஸை விட மிகவும் வேகமாக பரவி வரும் இந்த ஒமைக்ரன் வைரசால் அனைத்து நாடுகளும் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. இந்தியாவில் கோவக்சின் மற்றும் கோவிஷீல்டு போன்ற கொரோனா தடுப்பூசிகள் செலுத்தி வந்தனர்.
முன்னெச்சரிக்கை டோஸ் தடுப்பூசி:
தற்போது பரவும் வைரஸ் 3-வது அலையின் தாக்கம் அதிகரித்து வருவதால் ஐசிஎம்ஆர் முன்களப்பணியாளர்கள், மருத்துவப் பணியாளர்கள், 60வயதுக்கு மேற்பட்டோர், இணை நோய்கள் இருப்போர் ஆகியோருக்கு முன்னெச்சரிக்கை டோஸ் தடுப்பூசி செலுமாறு கூறியிருந்தது. அதன்படி இன்று (திங்கள்கிழமை) தடுப்பூசி செலுத்தும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் பொதுமக்களுக்கு நம்பிக்கை தரும் அறிவிப்பு ஒன்றை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
கோவாக்சின் மூன்றாவது டோஸ் பலன் அளிக்கிறதா?
அதில், 'கோவாக்சின் மூன்றாவது டோஸ் நம்பிக்கையளிக்கிறது. கோவாக்சின் முன்னெச்சரிக்கை டோஸ் போடுவதால் முதம் இரண்டு டோஸ் செலுத்தியதிலிருந்து 6 மாதங்களுக்குப் பின்னர் செலுத்தப்படும் இந்த டோஸ் இம்மியூனோஜெனிசிட்டியை அதிகரிக்கிறது. மரபணு ஒப்புமை உடைய, ஒப்புமையற்ற சார்ஸ் CoV-2 திரிபுகளுக்கு எதிராக இந்த முன்னெச்சரிக்கை டோஸ் நல்ல அளவில் ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது. முன்னெச்சரிக்கை டோஸ் சோதனையின்போது எந்தவித தகாத விளைவுகளும் ஏற்படவில்லை' என பதிவிடப்பட்டுள்ளது.
பூஸ்டர் டோஸாக எந்த தடுப்பூசியை செலுத்த வேண்டும்?
அதோடு பூஸ்டர் டோஸ் செலுத்திக்கோள்வோர் 2-வது தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் அதாவது 39 வாரங்கள் நிறைவடைந்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது. மேலும், இதற்கு முன்பு இரு டோஸ் தடுப்பூசி கோவிஷீல்ட் ஒருவர் செலுத்தியிருந்தால், அவருக்கு பூஸ்டர் டோஸும் கோவிஷீல்ட் தடுப்பூசிதான் செலுத்தப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகையன்று மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, 2022 ஜனவரி 3-ம் தேதி முதல் 15 முதல் 18 வயதுள்ள பிரிவினருக்கு தடுப்பூசியும், 10-ம் தேதி முதல் இணைநோய்கள் இருக்கும் 60 வயதுக்கு மேற்பட்டோர், முன்களப்பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்படும் எனவும் அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.