எங்க தடுப்பூசி 'ஓமிக்ரான்' வைரஸ் கூட 'நின்னு' மோதும்...! - 'தடுப்பூசி' நிறுவன அதிகாரி தகவல்...!
முகப்பு > செய்திகள் > உலகம்தங்கள் தடுப்பூசியின் செயல்திறனை ஓமிக்ரான் பாதிக்குமா என்பதைக் கண்டறிய ஆய்வுகள் நடைபெறுவதாக BioNTech நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி உகர் சாஹின் (Ugur Sahin) தெரிவித்துள்ளார்.
அதன் மூலம், புதிய தடுப்பூசி தேவைப்படுமா என்பதை நிர்ணயிக்கலாம் என்று தெரிவித்த அவர், மேம்படுத்தப்பட்ட தடுப்பு மருந்தை உருவாக்கும் பணிகளில் தற்போது BioNTech ஈடுபட்டுள்ளது என கூறியுள்ளார்.
எனினும் அது தேவைப்படுமா என்பது இன்னும் முடிவு செய்யவில்லை என்று சாஹின் குறிப்பிட்டார். மேலும், Pfizer-BioNTech நிறுவனங்களின் கொரோனா தடுப்பூசி ஓமிக்ரான் வைரசினால் கடுமையாகப் பாதிக்கப்படுவதிலிருந்து வலுவான பாதுகாப்பு அளிக்கக்கூடும் என கூறியுள்ளார்.
Booster என்ற மூன்றாவது தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதும் ஓமிக்ரான் கிருமிக்கு எதிராகப் பாதுகாப்பு அளிக்கலாம் என்று அவர் சொன்னார்.
Pfizer, BioNTech நிறுவனங்கள் ஆல்ஃபா, டெல்ட்டா ஆகிய வகைக் கிருமிகளுக்கு எதிரான தடுப்புமருந்தை ஏற்கனவே உருவாக்கிவிட்டன. அவை சோதிக்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையில் ஐரோப்பிய ஒன்றிய மருந்து ஒழுங்குமுறை ஆணையம், ஓமிக்ரான் கிருமிக்கு எதிரான தடுப்புமருந்துக்கு 3 முதல் 4 மாதங்களுக்குள் ஒப்புதல் அளிக்கப்படலாம் என்று கூறியுள்ளது.