திருக்குறளை எழுதியது ஒளவையாரா? திருவள்ளுவரா? 'பாவம் அவரே கன்பீஸ் ஆகிட்டாரு..!- பாஜக எம்.எல்.ஏ-வின் கலகல..!
முகப்பு > செய்திகள் > இந்தியா'திருக்குறள்ல ஒளவையார் என்ன சொல்லிருக்காங்கன்னா?' என மேடையில் பேசி வைரல் ஆகி உள்ளார் பாஜக எம்.எல்.ஏ ஒருவர்.

புதுச்சேரி எம்.எல்.ஏ ஆக இருப்பவர் அசோக் பாபு. கடந்த மே மாதம் 2021-ல் மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் நியமிக்கப்பட்ட 3 எம்.எல்.ஏ-க்களுள் ஒருவர் ஆக நியமனம் ஆனவர் எம்.எல்.ஏ அசோக் பாபு. முன்னதாக புதுச்சேரி பாஜக நகர மாவட்ட தலைவர் ஆக இருந்தவர் அசோக் பாபு.
புதுச்சேரியி முதல்வர் ரங்கசாமி பங்கேற்ற சட்ட தின விழா ஒன்றில் எம்.எல்.ஏ அசோக் பாபுவும் கலந்து கொண்டார். அது ஒரு சட்ட விழா என்பதால் சட்டத்துறையைச் சார்ந்த பல உயர்ந்த பதவிகளில் உள்ளோரும் அதில் கலந்து கொண்டிருந்தனர்.
விழாவில் பேச வந்த எம்.எல்.ஏ அசோக் பாபு, "நம் மத்தியில் ஆளக்கூடிய பிரதமர் மோடியும் புதுச்சேரி மாநிலத்தை ஆளக்கூடிய முதல்வர் ரங்கசாமியும் ஏறத்தாழ ஒரே மாதிரியானவர்கள் தான். ஏன் என்றால் இவர்கள் இருவரும் ஞானிகள். இருவருமே தீர்க்கதரிசிகள்.
இந்த நாடு நன்றாக இருக்க வேண்டும். இந்த நாட்டு மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று மட்டுமே இவர்கள் இருவரும் நினைப்பார்கள். இவர்களுக்கு வேறு எந்த சிந்தனையும் கிடையாது. இப்படித்தான் ஒளவையார் கூட திருக்குறளில் சொல்வார்கள்" எனக் கூற மேடையில் இருந்தோர் உட்பட பார்வையாளர்கள் வரை ஒட்டுமொத்த அரங்கமே சிரித்துவிட்டது.
சில விநாடிகளில் தனது தவறை உணர்ந்த எம்.எல்.ஏ அசோக் பாபு, "இல்லை... இல்லை. ஒளவையார் சொன்னது ஆத்திச்சூடி தான். ஒளவையார் சொன்னது வேறு. நான் சொல்ல வந்ததை நீங்கள் முழுவதுமாகக் கேட்டால் புரியும்" என சமாளிக்க அரங்கம் இன்னும் கூடுதல் ஆக சிரித்துவிட்டது.

மற்ற செய்திகள்
