'கைதான ராகினி திவேதியை அடுத்து'.. பிரபல இளம் நடிகை வீட்டில் ரெய்டு!.. பெங்களூரில் 'அடுத்தடுத்த திருப்பங்களை' கிளப்பும் 'போதைப்பொருள் சப்ளை' வழக்கு!
முகப்பு > செய்திகள் > இந்தியாபெங்களூருவில் போதைப் பொருள் சர்ச்சை பூதாகரமாகி வருகிறது.

முன்னதாக போதைப் பொருள் விற்பனை செய்த எச்.ஏ.சவுத்ரி, ஆர்.பத்ரே ஆகிய இருவரை போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் கடந்த ஆகஸ்ட் 20-ம்தேதி கைது செய்ததைத் தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள்அளித்த தகவலின் பேரில் பெங்களூருவில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த தமிழகத்தை சேர்ந்த கன்னட சின்னத்திரை நடிகை அனிகா, தொழிலதிபர் ரவீந்திரன், ஓட்டல் அதிபர் முகமது அனூப் ஆகிய 3 பேரை ஆகஸ்ட் 27-ம் தேதி போதைப் பொருள் தடுப்பு போலீஸார் கைது செய்தனர்.
மேற்கண்ட இந்த 3 பேருக்கும் போதைப்பொருள் சப்ளை செய்த விவகாரத்தில் நடிகை ராகினி திவேதி, நடிகை சஞ்சனா கல்ராணியின் நண்பர் ராகுல் ஷெட்டி, ஓட்டல் அதிபர்கள் பிரதீக் ஷெட்டி, கார்த்திக் ராஜ், ஆர்.டி.ஓ. ஆய்வாளர் ரவிசங்கர் ஆகியோரையும் அடுத்தடுத்து பெங்களூரு போலீஸார் கைது செய்தனர். நடிகை ராகினி திவேதி தனது நண்பர் ரவிசங்கர் மூலம் போதைப்பொருள் பயன்படுத்தி வந்ததும், போதைப்பொருள் விற்பனை கும்பலுடன் தொடர்பில் இருந்ததும் தெரியவந்ததை அடுத்து, இவர்கள் இருவர் மீதும் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டது. பிறகு ராகினி திவேதியை 5 நாட்கள் காவலில் எடுத்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே சஞ்சனா கல்ராணியின் நண்பர் ராகுல் ஷெட்டி கடந்த 3 ஆண்டுகளாக பெங்களூருவில் கன்னட திரையுலகினரை ஒருங்கிணைத்து இரவு விருந்து நிகழ்ச்சிகளை நடத்தியதாகவும், அந்த விருந்தில் போதைப் பொருள் விநியோகிக்கப்பட்டதாகவும் வெளியான தகவல்களை அடுத்து, கைது செய்யப்பட்டவர்களின் செல்போன், மடிக்கணினிகளை ஆராய்ந்ததில் மேலும் பலருக்கு இவிஷயத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து டெல்லி மற்றும் பெங்களூருவில் ஓட்டல் நடத்தி வந்த விரேன் கன்னா என்பவரின் வீட்டில் ரூ.30 லட்சம் மதிப்பிலான போதைப் பொருட்கள் சிக்கியதை அடுத்து அவரும் ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த லோயம் பெப்பர் சம்பா ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில்தான், பெங்களுருவில் நடிகை சஞ்சனா கல்ராணியின் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் அடுத்தகட்ட சோதனையை நடத்தி வருகின்றனர்.

மற்ற செய்திகள்
