கோர்ட்ல 'விசாரணை' நடந்திட்டு இருந்தப்போ... சைலன்டா கையில 'புல்லாங்குழலோட' உள்ள வந்த நபர்...! 'என்ன நெனச்சாரோ தெரியாது, திடீர்னு...' - அரண்டு போன ஜட்ஜ்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Sep 22, 2021 07:08 PM

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 2-ஆம் தேதி ஓம்பிரகாஷ் பாண்டே என்பவர் மும்பையின் மேற்கு புறநகர் பகுதியில் உள்ள தீன்தோஷி நீதிமன்றத்திற்கு வழக்கறிஞர் கோட் அணிந்துக் கொண்டு வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும் நீதிமன்றத்திற்குள் நுழைந்துள்ளார்.

Man claiming himself as Lord Krishna throws flute on judge

அப்போது அவர், 'நான் தான் கடவுள் கிருஷ்ணர். இந்த உலகில் கடவுளுக்கே அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இங்கே இருக்கும் ஒவ்வொரு வழக்கறிஞர்கள் வழக்கில் வாதாட அதிகப்படியான பணம் வசூலிக்கின்றனர். ஆவணங்களைக் கொடுக்க கோர்ட் கிளார்க் கூட பணம் கேட்கிறார்' என சத்தம் போட்டு கத்தியுள்ளார்.

இதனால் நீதி மன்றத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதோடு, ஓம்பிரகாஷ் பேசிக்கொண்டிருக்கும் போது திடீரென தன்னிடமிருந்த புல்லாங்குழலை எடுத்து நீதிபதியை நோக்கி வீசியதில், அது நீதிபதி அருகில் அமர்ந்திருந்த ஸ்டெனோகிராஃபர் மீது பட்டு அவருக்கு மண்டையில் சிறிது காயமும் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தையடுத்து ஓம்பிரகாஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரது வழக்கு விசாரணைக்கு வந்ததில், கடந்த வாரம் சிறையில் இருந்தபடியே நீதிபதியுடன் வீடியோ கான்பெரன்ஸ் மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.

வீடியோ கான்பெரன்ஸில் நீதிபதியிடம் மன்னிப்பு கேட்ட ஓம்பிரகாஷ் 'என் சகோதரன் கொலை செய்யப்பட்டதால் நான் மிகவும் மன அழுத்தத்துடன் இருந்தேன். இப்போது நான் என் தவறை உணர்ந்துவிட்டேன். எனக்கு திருந்த வாய்ப்பு கொடுக்க வேண்டும்' எனக் கேட்டுள்ளார்.

ஆனால், அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வழங்கவேண்டும் என்றும், இதனை மற்றவர்கள் பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் வாதிட்டார்.

வழக்கு விசாரணை முடிந்த பின் நீதிபதி வழங்கிய தீர்ப்பில், 'நீதிமன்றத்தில் நடந்த சம்பவம் திட்டமிட்டே நடத்தபட்டுள்ளது. இதனால் குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், 8,000 ரூபாயும் அபராதமும் விதிக்கப்படுகிறது.

அதோடு, குற்றவாளி பயன்படுத்திய புல்லாங்குழல் மற்றும் வழக்கறிஞர் கோட் போன்றவற்றை மேல் முறையீடு முடிந்த பிறகு அழித்துவிடவேண்டும்' எனவும் குறிப்பிடுள்ளார்.

மேலும், இந்த சம்பவம் நிகழும்போது பாதிக்கப்பட்ட ஸ்டெனோகிராபருக்கு அபராத தொகையில் 5 ஆயிரத்தை  வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Man claiming himself as Lord Krishna throws flute on judge | India News.