"அவரை சமாளிக்கிறது ரொம்ப கஷ்டம்".. இந்திய வீரர் பத்தி ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் உஸ்மான் கவாஜா சொன்ன விஷயம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலியாவின் பேட்ஸ்மேன் உஸ்மான் கவாஜா இந்திய அணியின் சுழற்பந்து வீச்சு குறித்து பேசியிருக்கிறார்.

Images are subject to © copyright to their respective owners.
நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடர் மற்றும் டி 20 தொடரை சிறப்பாக முடித்துள்ள இந்திய கிரிக்கெட் அணி, அடுத்ததாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் விளையாட உள்ளது. 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர் மற்றும் 3 ஒரு நாள் போட்டி தொடரை ஆடுவதற்காக ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு வந்துள்ளது. இதில், முதலாவதாக டெஸ்ட் தொடர் ஆரம்பமாக உள்ளது. இதன் முதல் டெஸ்ட் போட்டி, பிப்ரவரி 09 ஆம் தேதியன்று ஆரம்பமாகிறது.
Images are subject to © copyright to their respective owners.
முன்னதாக இந்திய அணியின் அஸ்வின், ஜடேஜா மற்றும் அக்சர் படேல் உள்ளிட்ட வீரர்களின் சுழற்பந்து வீச்சு நிச்சயம் ஆஸ்திரேலிய அணிக்கு நெருக்கடி கொடுக்கும் என அந்த அணியின் பயிற்சியாளர் தெரிவித்திருந்தார். இந்த சூழ்நிலையில் அஸ்வின் போலவே பவுலிங் ஆக்ஷன் கொண்ட இந்திய இளம் வீரர் மகேஷ் பிதியாவை கொண்டு ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பயிற்சியில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் துவக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா இந்திய அணியின் சுழற்பந்து வீச்சு குறித்து பேசியிருக்கிறார். அப்போது இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் ஆஸ்திரேலிய அணி பல அனுபவங்களை பெற்றிருப்பதாகவும் முன்பை விட தற்போது நல்ல முறையில் அணி முன்னேற்றம் அடைந்திருப்பதாகவும் தெரிவித்தார்.
Images are subject to © copyright to their respective owners.
தொடர்ந்து அஸ்வின் குறித்து பேசிய அவர்," அவர் நல்ல திறமை வாய்ந்தவர். சொல்லப்போனால் அவர் துப்பாக்கி போன்று செயல்பட கூடியவர். அவர் பந்து வீசும் போது அதிக வேரியேஷன்களை கொண்டுள்ளார். மேலும் கிரீஸையும் சிறப்பாக பயன்படுத்துகிறார். இந்த தொடரில் ஏதாவது ஒரு கட்டத்தில் மைதானம் சுழலுக்கு ஏற்றபடி மாறும். அப்போது அஸ்வின் ஆட்டத்துக்குள் இருப்பார். அந்த சூழ்நிலையில் அதிக ஓவர்களையும் அவர் பேசுவார். எனவே நான் அவருக்கு எதிராக எப்படி விளையாட போகிறேன்? எப்படி ரன்களை சேர்க்கப் போகிறேன்? என்பதில் தான் அனைத்தும் இருக்கிறது. அவருடைய பந்துவீச்சில் அதிக நேரம் தாக்கு பிடித்தால் தன்னுடைய யுக்தியை அவர் மாற்றி விடுவார். ஒரே மாதிரியான பந்துவீச்சை அவரிடம் இருந்து எதிர்பார்க்க முடியாது. புதுப்புது விஷயங்களை அவர் பரிசோதித்து பார்ப்பார். ஆகவே இது நிச்சயம் கடுமையான சவாலாக இருக்கும்" என்றார்

மற்ற செய்திகள்
