பரபரப்பு! COUPLE SHARING குரூப்... மனைவிகளை விற்று சம்பாதிச்ச 7 ஆண்கள்! சிக்குனது எப்படி?

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Pandidurai T | Jan 10, 2022 03:23 PM

கேரளா: கோட்டயம் மாவட்டம் கருகாச்சல் போலீசில் சங்கனாசேரியைச் சேர்ந்த பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில், தங்களது மனைவிகளை பிற நண்பர்களுடன் உடலுறவு வைத்து கொள்ள வற்புறுத்திய  ஏழு பேரை  கேரளா போலீசார் கைது செய்தனர்.

7 held as partner swapping racket busted in Kerala

'Couple Sharing' குழுவில் இருக்கும்  தனது கணவர், தன்னை வேறொரு ஆணுடன் உடலுறவு கொள்ள வற்புறுத்தியதாக, பெண் ஒருவர் கருகாச்சல் காவல் நிலையத்தில் புகாரளித்தார். தன்னை ஒரு இடத்திற்கு அழைத்து சென்று  அங்கு இருந்த மற்ற நண்பர்களுடன் உறவு வைத்துக்கொள்ள கட்டாயப்படுத்தியதாகவும், அங்கிருந்து தப்பித்து வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பெண்களை பரிமாறிக்கொள்ளும் ஆண்கள்

இதனையடுத்து போலீசார் 'Couple Sharing' குழு தொடர்பில் இருக்கும் அவரது கணவர் மற்றும் அவரது நண்பர்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.  அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.  7 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 25க்கும் மேற்பட்டோர் கண்காணிப்பில் உள்ளதாகவும், இன்னும் ஓரிரு நாட்களில் மேலும் பலர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

7 held as partner swapping racket busted in Kerala

தென் தமிழகம் தான் டார்கெட்.! பெண்களிடம் நூதன கொள்ளை!.. எப்படி பிடிச்சாங்க? நிஜத்துல ஒரு 'தீரன்' சம்பவம்!

'Couple Sharing' குழுவில் 1,000 க்கும் மேற்பட்ட தம்பதிகள் உள்ளனர். சுமார் 1,000 ஆண்கள் தங்கள் மனைவிகளை உடலுறவுக்காக மாற்றிக் கொள்ள தயாராக உள்ளனர் என்று காவல்துறை கூறுகிறது. சமூகத்தின் உயர் மட்டத்தில் உள்ள பலர் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர் என்றும் வட்டாரங்கள் தெரிவித்தன.

கோட்டயத்தைச் சேர்ந்த மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் செய்தி நிறுவனமான ஐஏஎன்எஸ்ஸிடம் கூறுகையில், "முதலில் டெலிகிராம் மற்றும் மெசஞ்சர் குழுக்களில் சேருவதும், பின்னர் இரண்டு அல்லது மூன்று ஜோடிகள் அவ்வப்போது சந்தித்துக் கொள்வதும் வாடிக்கையாக உள்ளது. அதன்பிறகு பெண்கள் பரிமாறிக் கொள்ளப்படுகிறார்கள், மேலும் ஒரு பெண்ணை மூவரால் பகிர்ந்துகொள்ளும் நிகழ்வுகள் கூட உள்ளன.  சில ஆண்கள் தங்கள் மனைவிகளை ஒரு நாள் உடல் உறவுக்காக பணத்திற்காக வழங்குகிறார்கள். "

7 held as partner swapping racket busted in Kerala

லவ் பண்ற பொண்ணுங்கள உளவு பார்க்கும் 'டிடெக்டிவ்' வேலை!!.. லட்சத்தில் கொழிக்கும் 20 வயது 'யூத்'!

இந்த பெண்கள் பரிமாற்றக் குழுவில் ஈடுபட்டவர்கள் மற்றும் இந்தக் குழு உறுப்பினர்கள் வேறு ஏதேனும் குழுக்களுடன் தொடர்பு வைத்திருக்கிறார்களா என்பது பற்றிய நுணுக்கமான விவரங்களைப் பெற விரிவான விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

7 held as partner swapping racket busted in Kerala

Tags : #COUPLE SWAPPING #KAYAMKULAM #PARTNER SWAPPING #KERALA #போலீஸ் #அதிகாரி #காவல்துறை

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. 7 held as partner swapping racket busted in Kerala | India News.