18 வருடம் பழசு.. ஆனால் ஐ-பாட் விலையோ ரூ.14 லட்சம்.. இதுதான் காரணம்!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்

By Saranya | May 13, 2019 07:32 PM

18 வருடம் பழைய ஐ-பாட் ஒன்றை நாம் எவ்வளவு விலை கொடுத்து வாங்குவோம்? இலவசமாகக் கொடுத்தால்கூட நாம் வாங்க யோசிக்கும் அளவுக்கு பழைய ஐ-பாட் ஒன்றின் விலைதான் 14 லட்சம் ரூபாய்.

18 year old first generation apple ipod is selling for 14 lakhs

2001-ஆம் ஆண்டு  வெளியான ஆப்பிளின் இந்த ஐ-பாட் அப்படியே புதிதாக பிரிக்கப்படாமால் கம்பெனி சீலுடன்  தற்போது ஈபே-யின் தளத்தில் விலைக்கு வந்துள்ளது. முதல் தலைமுறை ஐ-பாடான இது 5 ஜிபி ஹார்ட் டிரைவ், 2 இன்ச் எல்சிடி ஸ்கிரீன், ஸ்க்ரோல் வீல் மற்றும் 10 மணி நேரம் பேட்டரி சக்தி கொண்டது.   

தற்போது 20 ஆயிரம் டாலருக்கு விற்கப்படும் இதன் அன்றைய விலை 399 டாலர் மட்டுமே. ஆனால் இந்த ஐ-பாட் 18 வருடங்களுக்கு முன் சந்தைக்கு வந்தபோதே போட்டித் தயாரிப்புகளுக்கு மிகவும் முன்னோடியாக வெளிவந்ததாகும்.

எப்படியோ, ஆப்பிளின் தயாரிப்பு என்பதாலேயே இவ்வளவு விலை கொடுத்து இதை வாங்கவும் ஆட்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

Tags : #APPLE #IPOD